Close
செப்டம்பர் 20, 2024 1:29 காலை

புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி  அரசு மகளிர் கல்லூரியில் சர்வதேச யோகாதினம்

புதுக்கோட்டை

புதுகை கேகேசி அரசு கல்லூரியில் நடைபெற்ற சர்வதேச யோகா தினம்

புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி  அரசு மகளிர் கல்லூரியில் சர்வதேச யோகா தினம்   கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு முதல்வர்  பி.புவனேஸ்வரி தலைமை வகித்தார். பேராசிரியர் ஏ .ஜானகி வரவேற்றார். ஆனந்தா யோகா பயிற்சி  நிறுவனர் செல்வராஜ் கலந்து கொண்டு மாணவிகளுக்கும்,பேராசிரியர்களுக்கும்யோகா பயிற்சியின்  முக்கித்துவத்தையும் பற்றி விளக்கி  யோகா பயிற்சி யளித்தார்.

பின்னர் அவர் பேசுகையில்,  உடலையும், மனதையும் உயிர் ஆற்றலையும் மேம்படுத்த தினசரி யோகா பயிற்சி செய்வதன் மூலம் நீங்கள் உடல்நலம் மனநலம் பெற்று சிறப்பாக வாழ முடியும்
ஆசனங்கள் மட்டுமன்றி பிராணாயாமம், தியானம், பயிற்சி செய்வதே யோகா ஆகும். யோகா என்பது மனம், சிந்தனைத் திறன்,  நம்பிக்கை, நடுநிலை மாறாமை,   பணிவு, கடமை மாறாமை போன்ற எண்ணற்ற ஆற்றல் அனைத்தையும் ஒருநிலைப் படுத்தி செய்யப்படும்  மற்ற யோக ஆசனங்களில் ஆழ்ந்து செல்வதற்கு  முன்  சூரிய நமஸ்காரம்   அல்லது சில மென்மையான பயிற்சிகள் ஆகியவற்றைச் செய்து, உடலைத் தளர்த்திக் கொள்ளுங்கள்.

உஜ்ஜை மூச்சு அல்லது நீண்ட ஆழமான மூச்சுகள் நீங்கள் ஓய்வெடுக்க மற்றும் யோகத் தோற்ற நிலையில் நீடித்து இருப்பதற்கு  உதவும்.  மேலும் செய்ய மூச்சின் மீது கவனம் வையுங்கள். யோக நிலையில் ஓய்வெடுத்து உடல் நீட்டுவிக்கப்படுவதை உணருங்கள்.

புதுக்கோட்டை
யோகா பயிற்சியில் ஈடுபட்ட கேகேசி மகளிர் கல்லூரி மாணவிகள்

யோகா ஒரு வெறும் உடல் உடற்பயிற்சி அல்ல, அது உங்கள் உண்மையான இயல்புக்கு உங்களை அழைத்துச் செல்கிறது. யோக ஆசனங்களை விழிப்புணர்வு, உள் நோக்கிய நிலை, மற்றும் உங்கள் உடலை கௌரவிக்கும் உணர்வுகளுடன் செய்யுங்கள்.

இது உங்கள் ஆசனப் பயிற்சிக்கு  அதிகரித்த அருள் மற்றும் அழகை எடுத்து வரும்.யோகா தோற்ற நிலைகளைச் செய்யும் போது குறிப்பிட்ட மூச்சுத் தாளங்களைப் பயன்படுத்துதல் சுவாசம் மற்றும் உடலை இணைக்கிறது.

நீட்டிக்கப்படுகிற இடத்தின் மீது கவனம் செலுத்துதல் உடலையும் மனதையும் இணைக்கிறது. உடல், சுவாசம், மற்றும் மனம் ஆகியவை  யோகாசனத்தின்  போது ஒத்திசைந்து ஒன்றுகூடும். இந்த  யோக அணுகுமுறை உங்கள் யோகப் பயிற்சியை ஆழப்படுத்த உதவுகிறது என்றார் அவர்.  நிகழ்வில் .யோகா செய்முறை பயிற்சியாளர்  சண்முகம் மற்றும் பேராசிரியர்கள்,  700 க்கும் மேற்பட்ட  மாணவிகள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top