தமிழ்நாடு அரசு தேர்வாணையும் நடத்திய தொகுதி lV தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு புதுக்கோட்டை தன்னார்வ பயிலும் வட்டம், வாசகர் பேரவை சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரி, புதுக்கோட்டை தன்னார்வ பயிலும் வட்டம் மற்றும் புதுக்கோட்டை வாசகர் பேரவை இணைந்து நடத்திய, தமிழ்நாடு அரசு தேர்வாணையும் நடத்திய தொகுதி lV தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு நிகழ்ச்சியும், அவர்களின் போட்டித் தேர்வு தொடர்பான மாணவிகளு டனான கலந்துரையாடல் நிகழ்ச்சியும் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் சுகந்தி தலைமை வகித்தார்.புதுக்கோட்டை தன்னார்வ பயிலும் வட்ட பொறுப்பாளர் ப.சீனிவாசன் அறிமுகவுரையாற்றினார். போட்டித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வாசகர் பேரவை சார்பில் நூல்கள் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.பின்னர் போட்டித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தங்களு டைய படிப்பு அனுபவங்களை மாணவிகளுடன் பகிர்ந்து கொண்டனர்.
மணமுறிவு, பெற்றோர்கள் இழப்பு என்று பல்வேறு தடங்கல்களுக்கு இடையே போட்டித் தேர்வில் வெற்றிபெற்ற சுபஸ்ரீ, “போட்டித் தேர்வில் வெற்றிபெறுவதற்கு, எத்தனைத் தடைகள் வந்தாலும்” நமக்கென்று ஒரு அடையாளத்தை பெறவேண்டும் என்று தொடர்ந்து முயன்றால் நிச்சயம் வெற்றி பெறலாம்.
அதற்கு தானே ஒரு உதாரணம் அதோடு என்னுடைய பத்தாம் வகுப்பு படிக்கும் மகளின் ஐ.ஏ.எஸ் கனவை நிறைவேற்ற வேண்டும் என்ற என்னின் உயர்ந்த நோக்கமும்தான் தனது வெற்றிக்கு முக்கிய காரணம் என்று குறிப்பிட்டார்.அதேபோல மற்ற வெற்றியாளர்களும், போட்டித் தேர்வில் வெற்றி பெறுவதற்கு தொடர் முயற்சியும், வாசிப்பும் அவசியம் என்று குறிப்பிட்டனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய வாசகர் பேரவைச் செயலர் சா.விஸ்வநாதன், போட்டித் தேர்வில் வெற்றி பெறுவதற்கு செய்தித்தாள் வாசிப்பு மிக மிக அவசியம் என்று குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில், கணினி அறிவியல் துறைப் பேராசிரியர்கள் யசோதா, ஞானஜோதி மற்றும் பேராசிரியர்கள் மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.நிகழ்ச்சியை கல்லூரி வேலைவாய்ப்பு பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரி ஏற்பாடு செய்திருந்தார்.