Close
நவம்பர் 22, 2024 8:41 காலை

அம்பேத்கர் பிறந்தநாள்: புதுக்கோட்டை மாவட்ட தமிழ்வளர்ச்சித்துறைசார்பில் பேச்சுப்போட்டி

அம்பேத்கர்

புதுக்கோட்டையில் அம்பேத்கர் பிறந்தநாள் கட்டுரை போட்டி

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அண்ணல் அம்பேத்கர்  பிறந்த நாளை முன்னிட்டு
மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கானபேச்சுப் போட்டிகள் 19.04.2022 அன்று நடைபெறவுள்ளன.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்ட தகவல்:
தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-22- ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தியடிகள், ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் பிறந்த நாளன்று ஆண்டுதோறும் மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக் கான பேச்சுப்போட்டிகள் தனித்தனியே நடத்தி பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதன்படி, 2022 ஆம் ஆண்டில் அண்ணல் அம்பேத்கர்  பிறந்த நாளினை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் வருகின்ற (19.04.2022) செவ்வாய்க்கிழமை புதுக்கோட்டை, இராணியார் அரசு மகளிர் மேனிலைப்பள்ளியில் பள்ளி, கல்லூரி மாணாக்கர்களுக்கு (அரசு விதிமுறைகளின்படியும், சமூக இடைவெளியைப் பின்பற்றியும்) தனித்தனியே பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

மாவட்ட அளவில் நடத்தப்பெறும் இப்போட்டிகளில்; பங்குப்பெற்று வெற்றிபெறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குத் தனித்தனியே முதல் பரிசாக ரூ.5000, இரண்டாம் பரிசாக ரூ.3000, மூன்றாம் பரிசாக ரூ.2000 என்ற வகையில் வழங்கப்பட உள்ளது.

அத்துடன் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுள் அரசு பள்ளி மாணவர்கள் இருவரை மட்டும் தெரிவு செய்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசுத்தொகையாக ரூ.2000 வீதமும் வழங்கப்பட உள்ளது. பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி 19.04.2022 அன்று முற்பகல் 10 மணியிலிருந்தும், கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி   பிற்பகல் 1.30 மணியிலிருந்தும் நடத்தப்படவுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர் மட்டும் இப்பேச்சுப் போட்டிகளில்; பங்கேற்கலாம். பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் மாவட்டத்திலிருந்து மொத்தம் 30 மாணவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். இது தொடர்பாக  கீழ்நிலை அளவில் முதன்மைக் கல்வி அலுவலரால் பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு மாவட்ட அளவில் நடைபெறும் இப்போட்டிக்கு 30 பேர் கொண்ட மாணவர்கள் பட்டியல் முதன்மைக் கல்வி அலுவலரால் போட்டிக்குப் பரிந்துரைக்கப்படவுள்ளது.
எனவே பள்ளி மாணவர்களுக்கான கீழ்நிலை அளவிலான பேச்சுப்போட்டியில் பங்கேற்க விரும்பும்; பள்ளி மாணவர்கள் உரிய வட்டாரக் கல்வி அலுவலர்களையோ, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரையோ தொடர்பு கொள்ளலாம். கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் ஒரு கல்லூரியிலிருந்து ஒருவர் மட்டுமே பங்கேற்க முடியும்.

இது தொடர்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் செயற்பட்டு வரும் அனைத்துக் கல்லூரிகளின் (அரசு மற்றும் தனியார் கல்லூரிகள்) முதல்வர்களுக்கும் தமிழ் வளர்ச்சித் துறையிலிருந்து சுற்றறிக்கையும் போட்டியில் பங்கேற்பதற்கான படிவம் மற்றும் விதிமுறைகள் அனுப்பிவைக்கப்பெற்றுள்ளன. இப்போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்குபெற்று பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் கவிதாராமு  தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top