Close
நவம்பர் 21, 2024 11:57 மணி

கவிதைப்பக்கம்… இரவு… மரு.மு.பெரியசாமி..

கவிதைப்பக்கம்

இரவு- கவிதை மருத்துவர் மு.பெரியசாமி

இரவு…

இரவு
சூரிய ஒளியில்லாமல்
துளி மழையில்லாமல்
தூக்கம் விளையும்
சுந்தர வனம்!!
அங்கே
கனவுகள்….
கண்ணுறங்கும் நேரத்தில்
காகிதப்பூக்களாய்
காட்சிதருகிறது!!

இரவு…
ஹார்மோன்களை
கட்டவிழ்த்துவிட்டு
உடல்மாற்றம்
உஷ்ண மாற்றம்
உணர்வு மாற்றங்களுடன்
உலக மாற்றங்களை
உற்பத்திசெய்கிறது!!

இரவு…
இந்தியாவிற்கு
இனிய சுதந்திரத்தை
ஏந்திவந்து
எல்லோருக்கும் எடுத்துத்தந்தது!!
ஏகாதிபத்திய முறை
அன்றோடு
முடிவுக்கு வந்தது!

இரவு…
நிலவின்
ஒளிமுகத்தை
பௌர்ணமியாகவும்…!
நீண்ட…
அடர் கரும் கூந்தலை
அமாவாசையாகவும்
அழகுற காட்டுகிறது!!

பிறை சூடிக்கொண்ட
நீலகண்டன் உயிர்காத்து

இரவு பெரும் புகழ்கொண்டது!!
ரமலான் தினத்தன்று
பிறை சூடிக்கொண்ட
இரவோடு…
நாயகம் புகழ்பாடி
உலகம்
பேரின்பம் கண்டது!!

இரவு…
அமைதிக்கும்
அடர்ந்த குளிருக்கும்
அனுமதி வழங்கி…..
தொலைத்த ரகசியங்களை
உறவுக்குள் தேடும்போது
சில
வியர்வை முத்துக்களாகவும்,
சில
வித்துக்களாகவும்,
விடியலைத்தொடுகிறது!

மரு. மு.பெரியசாமி-புதுக்கோட்டை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top