புதுக்கோட்டை மாவட்டத்தில் ஓவியப் பயிற்சி முகாம் மற்றும் ஓவிய கலைக்காட்சிகள் 29.04.2022 அன்று நடைபெறவுள்ளது.
மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்ட தகவல்:
தமிழ்நாடு அரசு கலைப்பண்பாட்டுத் துறையின் கட்டுப் பாட்டின் கீழ் தமிழகம் முழுவதும் செயல்படும் ஜவகர் சிறுவர் மன்றங்கள் வாயிலாக உலக ஓவிய தினத்தன்று, ஓவியப் பயிற்சி பட்டறை நடத்திடவும், அதனை தொடர்ந்து சென்னை யில் மாநில அளவிலான கலைக் காட்சி நடத்திட வேண்டு மெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் ஓவியப் பயிற்சி முகாம்களில் மரபுசார்ந்த ஓவியங்கள், துணி ஓவியங்கள், கண்ணாடி ஓவியங்கள், பேப்பர் ஓவியங் கள், பானை, மரம் ஓவியங்கள், வாட்டர் கலர் ஓவியங்கள், பென்சில் ஓவியங்கள் உள்ளிட்ட ஓவியங்களும் இடம்பெறும் வகையில் நடத்தப்பட உள்ளது.
இம்முகாம் , பொன்னமராவதி தாலுகா, பொன்புதுப்பட்டி, புதுவளவு பஸ்ஸ்டாப் அருகேயுள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வரும் 29.04.2022 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.
பிற்பகல் 3. மணிக்கு மாணவர்கள் வரைந்த ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டு அவற்றில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த ஓவியங்கள் மாநில அளவில் சென்னையில் நடைபெறவுள்ள நிறைவு விழாவில் காட்சிக்கு வைக்கப்படும்.
மேலும், கலந்து கொள்ளும் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி பொருட்கள், பயிற்சி சான்றிதழ் மற்றும் மதிய உணவு வழங்கப்படும். இவ்வாய்ப்பினை புதுக்கோட்டை மாவட்டத் தில் உள்ள கலையார்வமிக்க மாணவ, மாணவிகள் பயன்படுத் திக்கொள்ள வேண்டும் என ஆட்சியர் தெரிவித்தார்.