கலைஞர்…
திருக்குவளையில் பிறந்து
திருவாரூரில் தவழ்ந்து
சீர்திருத்த கொள்கைகளை
அணிந்து
வளர்ந்த
திராவிட இயக்கம்
பெரியார் பள்ளியில்
பேரறிஞர் கல்வியில்
திராவிட கொள்கைகளை
கற்றவர்
திகட்டாத மொழியாம்
தேமதுர தமிழில்
திக்கெட்டும் மணக்கும்
தேன் காவியங்கள் படைத்தவர்
தண்டவாளத்தில் தலைவைத்து
தமிழுக்குள்
உயிர் வைத்த
தமினத்தலைவர்
தமிழகத்தை ஆண்ட
முதல்வர்
சாதி மதங்களை
புறம்தள்ளி
சமத்துவ எண்ணங்களை
அறம் என்று சொல்லிய
சமதர்ம ஞானி
தமிழ்
சமுதாயத்தின் ஏணி
வள்ளுவனுக்கு
வாழ்நாள் கோட்டம் கண்டு
வங்கக் கடலுக்குள்
அழகான தோட்டம்
தந்து
வான் புகழ் கொண்டவர்
வாய்ச்சொல்லில் வென்றவர்
மேட்டூர் நீர்பாய்ந்த
விவசாயத்தில்
மின்சார நீர் பாசனமும்
தந்தவர்
கைம்பெண் உரிமைக்கு
குரல் கொடுத்த
கருணை,
கல்வியை சீர்படுத்திய
நிதி!
தொல்காப்பிய பூங்கா
தந்து
சொல்லோவியம் கண்ட
குறளோவியம்,
செம்மொழி தமிழை
சீர்தூக்கிய
சரித்திரம்!
பெண்ணுரிமை காத்திட்ட
அஞ்சுகம்
பேரின்பம் தந்திட்ட
கலையுலகம்
பேரறிஞரின் நூலகம்
பேரவையின் புத்தகம்
கலைஞர்!
மரு.மு.பெரியசாமி- புதுக்கோட்டை.