Close
நவம்பர் 22, 2024 12:06 மணி

கலைச் செம்மல் எம்.எஸ். தேவசகாயம் நினைவு கலை மையம் சார்பாக கரூர் கலை விழா

கரூர்

கரூரில் நடைபெற்ற கரூர் கலை விழா

கலைச் செம்மல் எம்.எஸ். தேவசகாயம் நினைவு கலை மையம் சார்பாக கரூர் கலை விழா என்ற பெயரில் நாள் முழுவதும் தமிழ் இலக்கியம் ஓவியம் உட்பட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கரூர் காந்திகிராமம் லாஸ்ட் பார்க் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருந்தும் ஓவிய ஆசிரியர்கள் வந்து கலந்துகொண்டு கரூர் பள்ளி மாணவர் இடத்தில் ஓவியப் போட்டி நடத்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளித்தனர்.

சமீபத்தில் நல்லாசிரியர் விருது பெற்ற நல்லாசிரியர்கள் விழாவில் பாராட்டப்பட்டனர் சமீபத்தில் விருது பெற்ற தமிழறிஞர்கள் பலரும் இந்நிகழ்வுகளில் வரவழைக்கப்பட்டு பாராட்டப்பட்டனர்.
விழாவில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஓவியர் சகாயத்தின் மகன் ரவி தேவசகாயம் அவர்களால் உருவாக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கப்பட்டது.

கருர்
கரூரில் திறந்து வைக்கப்பட்ட வள்ளுவன் சிலை

மேலும் ரவி தேவசகாயம்   குறிஞ்சி குறள் மன்றம் அமைப்பு என்ற திருக்குறள் அமைப்பை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கரூர் வழக்கறிஞர் தமிழர் ராஜேந்திரன் பங்கேற்றார்.விழாவில் நடத்தப்பட்ட அனைத்து நிகழ்வுகளும் குறித்து தமிழ் ராஜேந்திரன் பாராட்டி உரையாற்றி வாழ்த்தினார்

2002 ஆம் ஆண்டு கரூர் திருமுக்கூடலூர் மணி முத்தீஸ்வரர் கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடத்திய நிகழ்வில் தனது பங்கு பற்றியும், சமீபத்தில் தஞ்சை பெரிய கோவிலிலும் கரூர் பசுபதீஸ்வரர் கோவிலிலும் நடத்தப்பட்ட குடமுழுக்குகளில் தமிழைப் பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்து நடவடிக்கை எடுத்த தன்னுடைய செயல்பாடு பற்றியும்.

மேலும் சமீபத்தில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிற்றம்பல மேடையில் தேவாரம் திருவாசகம் பாட தீட்சிதர்கள் தடை விதித்ததை எதிர்த்து போராட்டம் நடத்திய தெய்வத் தமிழ் பேரவையின் செயற்குழு உறுப்பினராக இருந்து போராடி அரசின் கவனத்தை ஈர்த்து சிற்றம்பல மேடையில் தேவாரம் திருவாசகம் பாட தமிழக அரசின் அரசாணையை பெற்று

அதன் மூலமாக அந்த சிற்றம்பல மேடையில் கனகசபை என அழைக்கப்படும் அந்த மேடையில் ஏறி தேவாரம் திருவாசகம் பாடி மகிழ்ந்த தன்னுடைய செயல்பாட்டை குறித்தும் நினைவுகூர்ந்தார் தமிழ் ராஜேந்திரன் .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top