விதை ( பெயர்ச்சொல்)
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்,
நட்புக்கு வித்தாகும்
நல்ல பழக்கம்,
அறிவுக்கு வித்தாகும்
நற் கல்வி,
ஆளுமைக்கு வித்தாகும்
நற் செயல்கள்,
பண்புக்கு வித்தாகும்
அன்பு,
பசுமைக்கு வித்தாகும்
மழை நீர்,
உயர்வுக்கு வித்தாகும்
உழைப்பு,
உள்ளத்தூய்மைக்கு வித்தாகும்
உண்மை,
வெற்றிக்கு வித்தாகும்
வீரம்- உலகின்
விடியலுக்கு வித்தாகும்
வெளிச்சம்,
இசைக்கு வித்தாகும்
காற்று,
இயக்கத்திற்கு வித்தாகும்
ஆற்றல்!
அழிவிற்கு வித்தாகும்
ஆசை,
ஆக்கத்திற்கு வித்தாகும்
ஊக்கம்,
புகழுக்கு வித்தாகும்
புண்ணியம்,
பொறுமைக்கு வித்தாகும்
கண்ணியம்!
நீயும்
ஓர் விதை!
நற்செயல்களை
நீயே விதை!
நாளை
நாடு சொல்லும்
சரித்திரத்தில்
உன் கதை!!!
>>>மருத்துவர் மு.பெரியசாமி, புதுக்கோட்டை.