Close
நவம்பர் 22, 2024 9:17 காலை

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா:  கல்லூரி மாணவர்களுக்கான இலக்கியப் போட்டிகள்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை கேகேசி அரசு மகளிர் கல்லூரியில் புத்தகத்திருவிழா கலைப் போட்டிகளில் பங்கேற்ற மாணவிகள்

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் 5 -ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவையொட்டி இன்று புதுக்கோட்டை மாவட்ட கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரைப்போட்டி, கவிதைப் போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் குறும்படப் போட்டிகள், கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெற்றது.

போட்டிகளை கவிஞர் தங்கம்மூர்த்தி தொடங்கி வைத்தார். கவிஞர் முத்துநிலவன், புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவர் கே.சரவணன், அரசு மகளிர் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் முத்தமிழ், எம்எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சிமைய விஞ்ஞானி முனைவர் ராஜ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

புதுக்கோட்டை

இந்நிகழ்வில், அரசு வழக்கறிஞர் செந்தில்குமார், மகாத்மா பள்ளி தாளாளர் ரவிச்சந்திரன், ஆசிரியர் குமரேசன், சதாசிவம், பேராசிரியர் பிச்சைமுத்து ஆகியோர் பங்கேற்றனர்.

ஜெ.ஜெ.கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் முனைவர் கோவிந்தன், அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்த எல் .பிரபாகரன், நேருயுவ கேந்திரா பொருளாளர் நமச்சிவாயம் ஆகியோர் நடுவர்களாக இருந்து போட்டிகளை நடத்தினர். போட்டிகளில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு கல்லூரிகளிலிருந்தும் ஏராளமான மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

புதுக்கோட்டை
இதில் பேச்சுப் போட்டியில் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கல்லூரி மாணவிகள், ரா.பபிதா முதல் இடத்தையும், வீ. ஜெயலெட்சுமி இரண்டாம் இடத்தையும் மெளன்ட் சியோன் கல்லூரியின் ர. அரவிந்த் மூன்றாம் இடத்தையும் பெற்றனர். பிற போட்டிகளுக்கான முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும் என நிர்வாகிகள் அறிவித்தனர்.

போட்டிகளை வாசகர் பேரவை செயலர் சா.விஸ்வநாதன், மகளிர் கல்லூரி பேராசிரியர்கள் முத்தமிழ், யோகாம்பாள் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். முன்னதாக தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலர் வீரமுத்து  வரவேற்றார். போட்டியில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top