Close
செப்டம்பர் 20, 2024 2:53 காலை

புத்தகம் அறிவோம்… ஒரு சூத்திரனின் கதை…

நூல் அரங்கம்

ஒரு சூத்திரனின் கதை

தமிழ்நாட்டின் முதல் பிற்பட்டோர் ஆணையத்தின் தலைவ ராக இருந்த ஏ.என்.சட்டநாதன் அவர்களின் சுயசரிதம் இது. முழுமையான சுய சரிதம் அல்ல.

1905ல் திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் பிறந்த சட்டநாதன், B.A.Hons. பட்டம் பெற்று (பிராமணர்கள்தான் இந்தப் படிப்பு படித்திருப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்த காலத்தில்) திருச்சி தேசியக் கல்லூரியில் எட்டு மாதங்கள் பணியாற்றி யது வரை (1928) யே இந்த சுயசரிதை (முதலில் அவர் தந்த தலைப்பு ‘சுயசரிதைப் பயிற்சி’) உள்ளது. ‘ஒரு சூத்திரனின் கதை ‘பின்னர் அவர் தந்த தலைப்பு.

சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று, சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் பல்வேறு நிலைகளில் ஐ.நா.சபை வரை பணியாற்றி 1956 ல் விருப்ப ஓய்வுபெற்று 1969ல் கருணாநிதி நியமித்த முதல் பிற்பட்டோர் நலக்குழுவின் தலைவராக பணியாற்றியவர்.

ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்த நூலை உத்தரா நடராஜன் பதிப்பிக்க,  தமிழில் கே.முரளிதான், ஆ.திருநீலகண்டன் இருவரால் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு ‘காலச்சுவடு’ பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த நூலின் பிற்பகுதியில் சட்டநாதன் பலவேறு தளங்களில் ஆற்றிய உரையின் தமிழாக்கமும் தரப்பட்டுள்ளது. இதன்வழி திராவிட இயக்க வரலாற்றை முழுமையாக அறியமுடிகிறது. சமூகவியல் ஆய்வாளர்களுக்கு அருமையான நூல். பொது வாசிப்பிற்கும் சிறந்த நூல்.

…பேராசிரியர் விஸ்வநாதன், வாசகர் பேரவை…

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top