Close
ஏப்ரல் 3, 2025 11:40 மணி

புத்தகம் அறிவோம்… ஹோ சிமின் -ஒரு போராளியின் கதை

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்- ஹோசிமின்

20ஆம் நூற்றாண்டின் தன்னிகரற்ற உலகத் தலைவர்வர்களில் ஒருவர் ஹோ சி மின். உலக வல்லரசாக கருதப்பட்ட அமெரிக்காவை (USA) தோற்றுப்போகச் செய்த போராளி. வியட்னாமின் தந்தை.

இரண்டாவது உலகப்போருக்குப் பின் மிக மோசமான போராகக் கருதப்படுவது 1945 ஆகஸ்ட் தொடங்கி 1973 ஜனவரி வரை நடைபெற்ற வியட்னாமியப் போராகும். ஜப்பானில் வீசப்பட்ட அணுகுண்டுகளை விட மோசமான சக்திவாய்ந்த குண்டுகளையெல்லாம் பயன்படுத்தியும் அமெரிக்கா அங்கே தோல்வியைத் தழுவியது.

அதற்கு மூல காரணமாக இருந்தவர் போராளி ஹோ சி மின்.
1890 மே 19 -ஆம் தேதியன்று பிறந்த ஹோ சி மின் (இயற்பெயர் நிகுயன்- சின் – ஹங் பிரெஞ்சுப்படையிடமிருந்து தப்பிக்க வைத்துக்கொண்ட பெயர்தான் ஹோ சி மின்.அதுவே வரலாற்றில் நிலைத்துவிட்டது) 1969 ஆம் ஆண்டு செப்.3 ஆம் தேதி தனது 79 ஆம் வயதில் மறைந்தார்.

வியட்னாம் முதலில் பிரெஞ்சுக்காலனியாதிக்கம் பின்னர் ஜப்பான் ஆதிக்கம் பின்னர் இரண்டாவது உலகப்போருக்குப் பின்னர் மீண்டும் பிரான்சு வர அதன் தொடர்ச்சியாக அமெரிக்கா கம்யூனிசம் வளராமல் தடுக்க நினைத்து நடத்திய போர் என்று வியட்னாமிய வரலாறு செல்கிறது. இதில் எல்லாவற்றிலும் பங்காற்றிய பெருமை ஹோ சி மின்னுக்கு உண்டு.

மார்க்சிய ஆய்வாளர் என்.ராமகிருஷ்ணன், சுருக்கமாக மிகச்சிறப்பாக ஹோ சி மின்னின் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளார். பிறப்பு, கல்வி, கம்யூனிச சித்தாந்த ஈடுபாடு, சிறை வாழ்க்கை, அந்திய ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டம் என்று அவரின் நீண்ட வாழ்க்கையை அழகிய சித்திரமாக வரைந்து தந்துள்ளார் ராமகிருஷ்ணன்.

வியட்னாமிய குடியரசு ஏற்படுத்த வேண்டுமென்ற ஹோ சி மின்னின் லட்சியம் நிறைவேறும் முன்பே அவர் மறைந்து விடுவார். வியட்னாமிய குடியரசு 1976 -ஆம் ஆண்டு ஜூலை 2 -ஆம் நாள் உருவாகியது.

” என் வாழ்க்கை முழுவதும் இதயபூர்வமாகவும் முழுபலத்து டனும் நமது தாயகத்திற்காகவும் புரட்சிக்காகவும் மக்களுக் காகவும் பாடுபட்டு வந்துள்ளேன். இந்த உலகத்தி லிருந்து நான் போகும்பொழுது இன்னும் அதிக நாட்கள் சேவை செய்ய முடியவில்லையே என்ற ஒரு ஏக்கத்தைத் தவிர, வேறு எதற்காகவும் நான் வருந்தவேண்டியதில்லை.”-ஹோ சி மின் தன் உயிலில். பக்.135. கிழக்கு பதிப்பகம் வெளியீடு.
044-42009601.

…பேராசிரியர் விஸ்வநாதன், வாசகர் பேரவை…

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top