Close
ஏப்ரல் 4, 2025 11:50 காலை

புத்தகம் அறிவோம்… மகாத்மா புலே..

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்- மகாத்மா புலே

மகாத்மா புலே “என்று தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களால் அன்போடு அழைக்கப்படும் ஜோதிராவ் கோவிந்த ராவ் புலே (1827 – 1890) 19 ஆம் நூற்றாண்டில் மகாராஷ்டிரத்தில் வாழ்ந்த மாபெரும் சமூக சீர்திருத்தப் பெரியார். மிகச்சிறந்த எழுத்தாளர்.

சாதி ஒழிப்பு, தாழ்த்தபட்ட மக்களின் விடுதலைக்காக போராடிக் கொண்டிருப்பவர்களின் முன்னோடி. சமூக மாற்றத்திற்கு முதல் தேவை பெண்களுக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் கல்வி அளிப்பதே. அதைச் செயல்படுத்த தன் துணைவியாருக்கு-சாவித்திரி பாய் புலே, இந்தியாவின் முதல் ஆசிரியை -கல்வி அளிப்பதிலிருந்து தொடங்கினார். இருவரும் இணைந்து பெண் குழந்தைகளுக்கென்று தனிப்பள்ளியை 1848ல் தொடங்கினர். அதற்காக அவர்கள் பட்ட துன்பங்கள் ஏராளம்.

விதவைகள் திருமணத்தை ஆதரித்தவர். குழந்தைத் திருமணத்தை எதிர்த்தவர். தன் கொள்கைகளைப் பரப்புவதற்காக “சத்திய ஜோதக சமாஜம் (உண்மை நாடுவோர் சங்கம் )” என்ற அமைப்பை தொடங்கி நடத்தியவர். எல்லா சமூகப்பிரச்னைகளுக்கும் மூலகாரணம் பிராமணர்கள் என்று அறிந்து அவர்களுக்கெதிரான, எழுத்துகளை, போராட்டத்தை முன்னெடுத்தவர் பூலே.அவரின் மிகச்சிறந்த நூல் “சத்தியம் என்னும் உலகப் பொது சமயம்”

“மகாத்மா பூலே – தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்” என்ற இந்த நூலில், சாதி,குழந்தை மணம், விதவைகள் துயரம், பெண்கல்வி, விவசாயிகள் துயரம் என்று பல்வேறு பிரச்சினைகளைப் பற்றி பூலே எழுதியவற்றில் முக்கியமானவற்றைத் தேர்ந்தெடுத்து, தொகுத்து தந்திருக்கிறார்கள். பல்கலைப் பதிப்பகம்,சென்னை.044-24815474.

…பேராசிரியர் விஸ்வநாதன்-வாசகர் பேரவை…

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top