Close
செப்டம்பர் 20, 2024 3:56 காலை

புத்தகம் அறிவோம்… தமிழர் தாவரங்களும் பண்பாடும்..

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்

தமிழகத்தில் சமீப காலமாக சுற்றுச்சூழலை மேம்படுத்துவது மற்றும் மரம் வளர்ப்பதைப் பற்றி அதிகம் பேசப்படுகிறது. Green Tamilnadu Mission – பசுமைத் தமிழகம்- திட்டத்தின் மூலம் 23.69% இருக்கும் வனப்பரப்பை 33% உயர்த்துவது என்று திட்டமிடப்பட்டுள்ளது.

மரக்கன்று நடுவது நல்லதொரு செயல்தான். ஆனால் நம் மண்ணுக்கு உகந்த தாவரத்தை வளர்க்கிறோமா என்பது சந்தேகமே. நீண்ட தாவரவியல் மரபைக் கொண்ட நமது வரலாற்றில் இது ஒரு முரண்.

தமிழர் தாவரங்களும் பண்பாடும்” என்ற இந்த நூல் இதுபோன்ற நமது அறியாமையைப் போக்கிக் கொள்வதற்கு உதவும் முதல்நூல். பேரா.கு.வி.கிருஷ்ணமூர்த்தி அறிவியல் உலகம் அறிந்த குறிப்பிடத்தக்க தாவரவியல் பேராசிரியர். அரசுக்கல்லூரிகளில் பணியாற்றி பின்னர் திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நீண்டகாலம் தரவரவியல் துறைத்தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

ஓய்விற்குப் பின்னும் தொடர்ந்து தாவரவியல் தொடர்பான ஆய்வில் இருப்பவர். அறிவியலை அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் தமிழில் எழுதும் பேராசிரியர்களில் முதன்மையானவர்.’அறிவியலின் வரலாறு’, ‘தமிழரும் தாவரமும்’ ‘அறிவியலில் பெண்கள் – ஒரு சமூக வரலாற்றுப் பார்வை, ‘ ஆகிய இவரின் நூல்கள் குறிப்பிடத்தக்கது.
தமிழர்- தாவரங்களும் பண்பாடும் என்ற இந்த நூல் ஒரு நீண்ட நேர்காணலின் தொகுப்பு. இயல் தாவரங்களும் அயல் தாவரங்களும், தாவரங்களும் பண்பாடும், தமிழரும் வேளாண்மையும், தாவரவியலும் கல்விப்புலமும்,
தாவர வியலும் எழுத்தும், மரபணுப் பயிர்கள் என்று ஆறு தலைப்புகளில் இந்த உரையாடல் உள்ளது.

தாவரங்கள் இல்லையென்றால் மனித இனமே இருக்காது. விலங்கினங்கள் இருக்காது.ஏன் உயிரினங்களே இருக்காது. தாவரங்கள் இல்லையென்றால் பூமியோ அதிலுள்ள உயிரினங்களோ இயங்க முடியாது. வாழ முடியாது.

உலகின் அடிப்படை உணவு உற்பத்தியாளர்கள் தாவரங்கள்தான். ஏனெனில் தாவரங்கள் மட்டுமே ஒளி ஆற்றலை வேதிய ஆற்றலாக (உணவு வடிவத்தில்) மாற்றக்கூடியவை என்று தாவரங்களின் அவசியம் பற்றிக் குறிப்பிடும் பேராசிரியர், தாவரங்களின் அடிப்படை முக்கியத்துவத்தை பண்டைத் தமிழர்கள் முற்றிலும் உணர்ந்திருந்தனர்.

எனவே தம்முடைய பண்பாட்டிலும் சமூக வாழ்விலும் தாவரங்களுக்கு ஒரு புனிதத்தன்மையைக் கொடுத்தனர். தாவரங்களைக் கடவுளாக அல்லது கடவுளின் ஆவி (Spirit) உறையும் இடங்களாக கருதி வழிபட்டனர். தாவர உணவு வகைகளுக்கு கலாச்சார அடையாளங்களைக் கொடுத்தனர் என்கிறார். நல்லதொரு உரையாடல் நூலை உருவாக்கிய ஆதி வள்ளியப்பனுக்கு நன்றி. இது.சூழலியல் ஆர்வலர்களுக்கும், மரம் வளர்ப்பவர்களும் அருமையான கையேடு.
பாரதி புத்தகாலயம் வெளியீடு.044 – 24332424.

##பேராசிரியர் விஸ்வநாதன்-வாசகர் பேரவை##

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top