Close
நவம்பர் 21, 2024 4:39 மணி

புத்தகம் அறிவோம்… யூதாஸ்

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்

நாவலாசிரியர் வளன் எழுதிய ’யூதாஸ்’ நாவலை ஒரே அமர்வில் வாசித்தேன். சுவராசியமான தகவல்களுடன் கதையாடல் விரிந்துள்ளது. இதுவரை வளன் என்ற பெயரில் எழுதப்பட்ட எந்தப் படைப்பையும் வாசித்ததாக நினைவு இல்லை.

அமெரிக்காவிலுள்ள பாஸ்டன் நகரில் வசிக்கிற வளன் எழுதிய முதல் நாவல்தான் யூதாஸ். சரி, இருக்கட்டும்.
கிறிஸ்தவ மறைநூலான விவிலியத்தில் இயேசு பற்றியும் அவருடைய சீடரான யூதாஸ் பற்றியும் இடம்பெற்றுள்ள கதைகளை முன்வைத்து மனித இருப்பின் சாரத்தை நாவலாசிரியர் விவாதித்துள்ளார்.

நன்மை X தீமை, நல்லவர் X கெட்டவர் என்ற முரணில் சமூகம் கட்டமைத்திடும் குறியீட்டின் பின்புலம் என்ன? சமூகத்தின் நண்மைக்காக உருவாக்கப்படும் நல்ல விஷயம் எப்பொழுதும் அதிகாரத்துடன் ஏன் தொடர்புடையதாக இருக்கிறது? தீமை ஏன் எப்பொழுதும் இவ்வளவு கவர்ச்சிகரமாகக் கவர்ந்திழுக் கிறது? தொடர்ந்திடும் கேள்விகளை முன்வைத்து நாவலாசி ரியர் கண்டறிந்த விஷயங்கள் நாவலாகியுள்ளன.

காலங்காலமாக யூதாஸ் என்ற சொல் தொன்மமாக வழக்கி லுள்ளது. துரோகம் என்ற சொல்லுக்கு அகராதிப் பொருளாக யூதாஸ் என்ற சொல் இடம் பெறும் சூழல் நிலவுகிறது. நாவலாசிரியர் வளன், இதுவரை யூதாஸ் என்ற பிம்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள கிறிஸ்தவ மத அரசியலைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளார்.

யூதாஸ் நாவலை வாசிக்கும்போது, இந்திய அரசியல் சூழலை ஒப்பிடும் மனநிலை உருவாகிறது. பொதுவாக மனிதர்களின் குருதியில் ஏதோவொரு ஆதி விலங்கின் ரத்தத்தின் எச்சம் கலந்திருக்கிறது.

இதனால்தான் புத்தர், இயேசு செய்த போதனைகளையும்மீறி எல்லாவிதமான வன்முறைகளையும் செய்திட ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட மத அடிப்படைவாதிகள் துடிக்கின்றனர். அறம் என்ற சொல்லின் பின்னர் பொதிந்திருக்கிற குற்ற மனம் குறித்து எவ்விதமான அக்கறையும் இல்லாமல் வைதிக சநாதனம் எங்கும் அதிகாரம் செலுத்திட முயலுவதைக் கண்டறிந்திட முடிகிறது.

யூதாஸ் நாவல் மூலம் வளன் சித்திரித்துள்ள கதையாடல் மதத்திற்கு அப்பால் மனிதர்களின் ஆதார உணர்ச்சிகளான அன்பையும் சக மனிதர்களை நேசித்தலையும் முதன்மைப் படுத்தியுள்ளது. யூதாஸ் நாவல், வாசிப்பின் வழியாக வாசிப்பில் கிளர்த்திடும் அனுபவங்களும் துரோகம் பற்றிய பேச்சுகளும் ஒருபோதும் முடிவற்றவை.யூதாஸ், வளன். எழுத்து பிரசுரம். தொடர்புக்கு: 8925061999.

#விமர்சகர் ந. முருகேசபாண்டியன்#9443861238#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top