Close
நவம்பர் 22, 2024 6:52 மணி

புத்தகம் அறிவோம்… இந்திய தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்..

பதுக்கோட்டை

புத்தகம் அறிவோம்

ஆய்வாளர் பே.சு.மணி, அறிஞர் வெ.சாமிநாத சர்மாவின் வாரிசு. இவரின் நூல்களும் சர்மாவின் நூல்களும் அறிவு சார்ந்தவை. தேச பக்திமிக்கவை.சர்மாவின் மறைவிற்குப் பின் அவருடைய நூல்களை பாதுகாத்து முறைப்படுத்தியதில் இவருக்கு முக்கிய பங்கு. வரலாறு, சமூகம், ஆன்மீகம், இலக்கியம் என்று பல துறைகளையும் சார்ந்து 40 க்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். எல்லாமே முதல்தரமான ஆய்வு நூல்கள். அதில் ஒன்று தான் “இந்திய தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.”

இந்திய மக்களிடையே தேசிய உணர்வை வளர்த்தெடுத்ததில் தனிமனிதர்கள் தொடங்கி பலவேறு, சமூக, சமய, இயக்கங்க ளுக்கும் பெரும் பங்குண்டு. குறிப்பாக, ராஜாராம் மோகன்ராய்- அவரின் பிரம்ம சமாஜம்,விவேகாநந்தர்- அவரின் ராமகிருஷ்ண இயக்கம்,சுவாமி தயானந்தசரஸ்வதி- அவரின் ஆரியசமாஜம்,பிரம்மஞான சபை என்றழைக் கப்படும் தியோசாிக்கல் சொஸைட்டி,

விவேகாநந்தரின் பெண் சீடர், பாரதியின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்த சகோதரி நிவேதிதா என்று பலரும் , அமைப்புகளும் இந்திய தேசிய இயக்கத்தின் வளரச்சியில் பெரு பங்காற்றி உள்ளன. இவைகளின் பங்களிப்பைப்பைப் பற்றி விரிவாக ஆய்வு செய்கிறது இந்த நூல்.

பெரும்பாலான போட்டித் தேர்வுகளின் வினாக்களில் இந்திய தேசிய இயக்கம் முக்கியமான இடத்தை பெறுகிறது. அந்தவகையில் போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கும் , வரலாறை முதன்மை பாடமாக எடுத்து படிப்பவர்களுக்கும் பயனுள்ள நூல். சிதம்பரம், மெய்யப்பன் தமிழாய்வகம் வெளியீடு.

# சா.விஸ்வநாதன், வாசகர்பேரவை-புதுக்கோட்டை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top