Close
செப்டம்பர் 20, 2024 1:41 காலை

புத்தகம் அறிவோம்… மறைக்கப்பட்ட இந்தியா..

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்

நாடு பிடிக்கவோ அல்லது மதப்பிரசாரம் செய்வதற்காகவோ ஆயிரக்கணக்கான மைல் கடற்பயணம் மேற்கொண்ட வாஸ்கோடகாமா, பார்த்தலோமியா டயஸ், ஜீகன்பால்க் பயணிகள் போலின்றி, அறிவையும் ஞானத்தையும் தேடி பல்லாயிரம் மைல்கள் தனியே பயணம் செய்து, இந்தியா விற்கு வந்து சேர்ந்த துறவி யுவான்சுவாங் .

தனது வாழ்நாளில் 17 வருடங்களை அவர் பயணத்திலேயே கழித்திருக்கிறார்.கழுதைகளிலும் ஒட்டகங்களிலும், மட்டக் குதிரைகளிலும், கால்நடையாக கடந்து வந்த தூரம் 20 ஆயிரம் மைல்களுக்கும் அதிகம். பக்.12.

இரண்டு தேசங்களின் தேசிய கீதத்தை எழுதிய பெருமை தாகூருக்கு உண்டு. அவர்தான் (இந்தியாவின் ஜன கண மண பாடல்) பங்களாதேஷின் தேசிய கீதமான “அமர் ஷோனார் பங்களா” பாடலை எழுதினார். பக்.24.

“சரித்திரத்தேர்ச்சி கொள் ” என்பார் பாரதி புதிய ஆத்திச் சூடியில்.”வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே” என்பார் வைகைப் புயல் இருபத்தி ரெண்டாம் புலிகேசியில்.

சமகால தமிழ் எழுத்தாமைகளில் முக்கியமான எஸ்.ராமகிருஷ்ணன் தன்னுடைய உரையாடல்களிலும், எழுத்திலும் தொடர்ந்து வரலாற்றின் அவசியத்தை பதிவு செய்துகொண்டிருக்கிறார்.

டாயின்பி, டி.டி.கோஸாம்பி , ஜவஹர்லால் நேரு தொடங்கி, மதன், எஸ்.ராமகிருஷ்ணன் வரை வரலாறை முதன்மைப் பாடமாக எடுத்து படிக்காதவர்கள் வரலாற்றை சிறப்பாக ஆய்வு செய்திருக்கிறார்கள்.சுவாரஸ்யமாகவும், எல்லோரும் வாசிக்கின்றவகையிலும் பதிவு செய்திருக்கிறார்கள்.

எஸ்.ரா. ஆங்கில இலக்கியம் படித்தவர். வரலாற்றின் மீது எஸ்.ரா.விற்கு உள்ள ஆர்வத்தோடு ஆங்கில இலக்கியம் படித்திருந்ததால் வரலாற்றை தெளிவாக ஆராய வைத்திருக் கிறது. இன்றும் மிகச் சிறந்த வரலாற்று நூல்கள் அதிகம் இருப்பது ஆங்கில மொழியில்தான்.

எஸ்.ரா.வின் இந்த “மறைக்கப்பட்ட இந்தியா” அவரின் “எனது இந்தியாவின் ” தொடர்ச்சிதான். ஜூனியர்விகடன் இதழில் தொடராக வந்து பின்னர் விகடன் பிரசுரத்தால் நூலானது. தற்போது எஸ்.ரா.வின் “தேசாந்திரி” பதிப்பகமே வெளியிடுகிறது.

யுவான் சுவாங்கிற்கு இருந்த தேடலைப் போன்றே எஸ்.ராவிற்கும், தேடலும், தொடர் வாசிப்பும் இருந்ததால் இந்த நூல் சாத்தியமாகியிருக்கிறது.”மறைக்கப்பட்ட இந்தியாவில் ” புதிய, அரிய தகவல்களுடன் 52 கட்டுரைகள் உள்ளது. ஒவ்வொரு கட்டுரையோடு கூடுதல் வாசிப்பிற்கு முழு விபரங்களோடு நூல்கள் தரப்பட்டுள்ளது.

வரலாற்று ஆசிரியர்கள் பாடநூல்களைத் தாண்டி நிறைய சொல்ல இந்த நூலில் சுவாரஸ்யங்கள் கொட்டிக் கிடக்கிறது.
வாருங்கள் நாமும் நூலின் உள்ளே நுழைந்து பார்ப்போம்..!

#சா.விஸ்வநாதன்- வாசகர் பேரவை- புதுக்கோட்டை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top