Close
செப்டம்பர் 20, 2024 3:39 காலை

புத்தகம் அறிவோம்… “டிங்குவிடம் கேளுங்கள்”

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்

உன்னைப் பொறுத்தவரை மிகச் சிறந்த நண்பர்கள் யார்? உன்னுடைய நண்பர் யார்?-எம்.ஜோசப், பரமக்குடி.

நான் பலரின் நட்பைக் கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறேன். அவற்றில் உயர்வாக நினைப்பது பொதுவுடைமையின் தந்தை கார்ல் மார்க்ஸ் – ஏங்கெல்ஸ் இருவரின் நட்புதான்.மார்க்ஸியம் என்ற சித்தாந்தம் மார்க்ஸ் பெயரில் இருந்தாலும் அதில் ஏங்கெல்ஸுன் பங்கும் இருக்கிறது.மார்க்ஸ் – ஏங்கெல்ஸ் இருவரின் படைப்புகளையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாது ! இந்த அபூர்வமான, ஆக்கப்பூர்வமான நட்பு 40 ஆண்டு காலம் நீடித்தது. உலகின் தலை சிறந்த நட்பாக நீடித்து விட்டது.

என்னுடைய நண்பர் என்று தனியாகச் சொல்லமுடியாது. நீங்கள் உட்பட எல்லோரும் என்னுடைய நண்பர்கள்தாம் ஜோசப். பக்.30.கடிகாரத்தைக் கண்டு பிடித்தவர் யார் டிங்கு?
வி.பொன் தர்ஷினி, 11 -ஆம் வகுப்பு, கமலாவதி மேல்நிலைப்பள்ளி சாகுபுரம்.

நேரத்தை அளவிடுவதற்கு சூரிய கடிகாரம், நீர் கடிகாரம் எல்லாம் பயன்படுத்தப்பட்டு வந்தன. கி.பி.1510 -ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த பீட்டர் ஹென்கின் நேரத்தைக் காட்டும் கெடிகாரம் ஒன்றை உருவாக்கினார். 1656 -ஆம் ஆண்டு டச்சு தொழில்நுட்ப வல்லுநர் கிரிஸ்டியன் ஹியுஜென்ஸ் ஊசல் (பெண்டுலம்) கடிகாரத்தை உருவாக்கினார்.

இவர் தான் ஒரு நாளைக்கு 24 மணி நேரம், ஒரு மணிக்கு 60 நிமிடங்கள், ஒரு நிமிடத்திற்கு 60 நொடிகள் என்று பிரித்தார். தொடர்ந்து பல முன்னேற்றங்களையும் செய்தார். இன்றைய கடிகாரங்களுக்கு முன்னோடி ஹியுஜென்ஸ் உருவாக்கிய கெடிகாரங்கள்தாம், பொன் தர்ஷினி.

இப்படி அறிவியல் கேள்விகள், வரலாறு, உடல்நலம், சமூகம், நம்பிக்கை, மூட நம்பிக்கை உறவுகளுக்குள் வரும் சிக்கல்கள் சார்ந்த கேள்விகள் என்று நூற்றுக்கணக்கான கேள்விகளுக்கு இந்நூலில் விடைகள் தந்துள்ளார் எஸ்.சுஜாதா.

“இந்து தமிழ்திசை”யில் குழந்தைகளுக்கான “மாயாபசார்” இணைப்புப் பகுதியில் வெளிவந்த “டிங்குவிடம் கேளுங்கள்” என்ற குழந்தைகளின் கேள்வி பதில் பகுதியில் வந்தவற்றின் தொகுப்புதான் “டிங்குவிடம்கேளுங்கள்”

“குழந்தைகளின் கேள்விகளும் அதற்கான டிங்குவின் பதில்களும் அனைத்து வயதினரும் அறிந்து கொள்ள வேண்டிய அறிய பொங்கிஷம்” என்கிறார் அழகம்பெருமாள் என்ற திரைப்பட இயக்குநர்.

“மாணவர்களின் சிந்தனைத் திறன் மேம்படவும் வினா எழுப்பும் ஆர்வத்தைத் தூண்டவும் வைத்த சிறந்த பகுதி டிங்குவிடம் கேளுங்கள் பகுதி” என்று திருச்சி சமயபுரம் எஸ்.ஆர்.வி.பள்ளி தமிழாசிரியர் சி.மகாலட்சுமி கூறுகிறார்.
அறிவியல் சிந்தனையை வளர்க்க குழந்தைகளுக்கு இந்நூலைப் பரிசளிப்போம். இந்து தமிழ்திசை வெளியீடு.
விலை ரூ.120/-.

# சா. விஸ்வநாதன்-வாசகர் பேரவை-புதுக்கோட்டை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top