Close
செப்டம்பர் 19, 2024 11:17 மணி

புத்தகம் அறிவோம்… பணம் காய்ச்சி மரம்..

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்

பணமும் பொருளும் சுழன்றுகொண்டே இருக்க வேண்டும். அது நம் தேவைகளை பூர்த்தி செய்துவிட்டு அடுத்தவரிடம் செல்ல வேண்டும். பயன்படுத்தாத பணமும் பொருளும் தேக்க நிலையை உருவாக்கும். நம் வீடுகளில் பயன்படுத்தாத பணம் இருக்கிறதோ இல்லையோ பயன்படுத்தாத பொருட்கள் ஏராளம் இருக்கும்.

வீடு சிறுத்தாலும் பொருள்கள் பெருத்துப் பிதுங்கி வழியும் நம்மில் பலரது வீடுகளில் தேவை முடிந்துவிட்டது என்று அறிந்து, அந்தப் பொருளை தானமாகவோ விலைக்கோ அல்லது குப்பைக்கோ கொடுக்க வராத மனத்தை என்னவென்று விவரிக்க முடியும்.

பற்றாக்குறை கொண்ட மனத்திற்குப் பொருட்களை நிறைத்து வைத்துப் பார்க்கப் பிடிக்கும். எதையும் பிரிய மனம் வராது. என்றாவது தேவைப்படும் என்று நினைத்து வைத்திருப்போம். அது கடைசியில் யாருக்கும் பயன்படாமல் அழிந்துபோகும். அப்படி என்றால் நம் வீடு என்பது பொருட்கள் வீணாகக் காத்திருக்கும் கிடங்கா? அப்படி வேண்டாத பொருட்கள் நிறைந்திருக்கும் வீட்டில் ஐஸ்வர்யம் வருமா?

தினமும் பயன்படுத்தும் பொருள் ஒன்றை ஒரு வருடமாக பயன்படுத்தவில்லை என்றால் அது வீண் என்று முடிவு செய்யுங்கள். இப்போது பயன்படுத்தாதவற்றை எப்போதும் பயன்படுத்தப்போவதில்லை. அதுதான் நிஜம். நல்ல நிலையில் உள்ளதை தேவைப்படுவோருக்கு அளியுங்கள். யாருக்கும் உதவாததை உடனே அகற்றுங்கள். நீங்கள் உருவாக்கும் இந்த புதுவெளிதான் செல்வம் வரும் புது வழி.
பக்.64-65.

டாக்டர் ஆர்.கார்த்திகேயன் எழுதி”இந்து தமிழ் திசை” வெளியிட்டிருக்கும் “பணம் காய்ச்சி மனம்” பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளை உளவியல்ரீதியாக அணுகி இருக்கும், வழக்கத்திலிருந்து மாறுபட்ட நூல்.

பணம் பண்ணுவது எப்படி? இது ஒரு உளவியல் வழி முறை.பணம் வரவிற்கு தடையான குப்பை எண்ணங்கள். அதிக வட்டி ஆபத்து,விரட்டி அடியுங்கள் வீண்செலவுகளை.

சுத்தமான சூழல் செல்வத்தைக்கவரும்.பணம் மரத்திலா காயக்கிறது இல்லை மனத்தில் காய்க்கிறது. இது போன்ற 20 தலைப்புகளில் இந்த நூல் அமைந்துள்ளது.

பணத்தை சம்பாதிக்கவும், இருப்பதைச் சேமிக்கவும்,
இருக்கும் கடனை அடைக்கவும்,வரவிற்கு ஏற்ப செலவுகளைத் திட்டமிடவும்,முதலீடுகள் செய்யவும்,பிடித்த வேலையில் ஈடுபடவும்,விரும்பும் தொழிலைத் தொடங்கவும்,
நிறைவுடன் வாழவும், நமக்குத் தேவையான வழிமுறைகள் இந்த நூலில் உள்ளது.120 ரூபாயில் பணம் பண்ணலாம் வாருங்கள்.இந்து தமிழ்திசை வெளியீடுரூ.120.

#சா. விஸ்வநாதன்-வாசகர்பேரவை- புதுக்கோட்டை#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top