“கற்பதற்காக அணுசரனையான சூழல் உருவாக ஒரு வழியுண்டு. அது நாம் கல்வியை மதிப்பெண்களைத் தாண்டி நேசிக்கக் கற்றுக்கொள்வது மட்டுமே. அப்போது நம் வாசிப்பு விரிவடையும். நாம் பாடப் புத்தகங்களைத் தாண்டிப் படிக்கத் தொடங்குவோம்.
நம் தேடல் ஒவ்வொரு நிகழ்வு பற்றியும் அலசுவதாக அமையும். நாம் எதையும் அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் கேள்வி கேட்கத் தொடங்குவோம். சரியான விடைகள் சரியான வினாக்களிலிருந்தே விடுபடத் தொடங்குகின்றன. “*பக்.8).
“முறையான கல்வி என்பதே முறைசாராக் கல்விதான். எந்த வரையரைக்குள்ளும் திணித்துக்கொள்ளாமல், நாம் தெரிந்துகொள்ளவும், அறிந்து கொள்ளவும், புரிந்து கொள்ள வும் முற்படும்போதுதான் நம் கல்வி தொடங்குகிறது.”
(பக்.14).
“மனப்பாடம் செய்யக் கற்றுக்கொள்வதையே கல்வி என் எண்ணுபவர்கள் எதையும் பெரிதாக சாதிக்க முடியாது. அவர்கள் பணியிலும் விதிகளைத் தாண்டி எதையும் சிந்திக்க மாட்டார்கள்.அவர்கள் புதிதாக நிறுவனத்திற்கு எதையும் செய்யமாட்டார்கள்.”(பக்.16).
“நமக்காகவே இதைச் செய்கிறோம். மற்றவர்களுக்காக அல்ல” என்று எண்ணுகிறபோது அது விருப்பத்திற்குரிய செயலாகவும், யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் செய்கிற செயலாகவும் ஆகிவிடும் என்பது உண்மை.
கட்டுப்பாடு என்பது அனைத்திலும் நெறியைக் கடைபிடிப்பது தான்.குறிப்பிட்ட நேரத்திற்கு தவறாமல் துயில் எழுவது, முறையாக தூய்மையாக உடலைப் பேணுவது. கட்டாயம் உடற்பயிற்சி செய்வது,நல்ல உணவை உண்பது,அன்று நடத்தப்பட்ட பாடத்தை அன்றே படிப்பது.
வகுப்பில் பாடம் நடத்தும்போது ஆசிரியரையே உலகமாக் கிக்கொள்வது,பொழுதாக்கங்களை வடிவமைத்துக்கொள்வது. பொழுதுபோக்குகள் காலத்தை விழுங்கி விடாமல் பார்த்துக் கொள்வது.
ஒரு போதும் தீய பழக்கங்களை சுவைக்கக்கூட எண்ணாமல் இருப்பது.பெரியவர்களிடம் அன்புடன் நடந்துகொள்வது, போன்றவற்றை யார் கைக்கொள்கிறார்களோ அவர்களை மத்திய சிறையிலிருக்கும் குற்றவாளிகள் மத்தியில் கொண்டு போய்விட்டாலும் புத்தர்களாக பொலிவுடன் திரும்பி வருவார்கள். நன்றாக எழுதவும் பேசவும் கற்றுக்கொள்வது கல்வியின் முக்கியமான அம்சம்”
தினமும் செய்தித்தாளை வாசிக்க பழக வேண்டும்.
(பக். 29-30). இப்படி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள நல்ல செய்திகளுடன் எழுதப்பட்ட நூல்தான் இறையன்புவின்
எது சரியான கல்வி?” 32 பக்கமே உள்ள இந்த நூல் மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டி.நேசம் வெளியீடு.
#சா. விஸ்வநாதன்-வாசகர்பேரவை- புதுக்கோட்டை #