Close
செப்டம்பர் 20, 2024 3:59 காலை

புத்தகம் அறிவோம்… கு. அழகிரிசாமி(கரிசல் எழுத்தாளனின் படைப்புலக வாழ்வு)

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்

” அன்பளிப்பு என்னும் சிறுகதைத் தொகுப்புக்காகச் சாகித்ய அகாடமியின் விருதினை முதல் தமிழ் எழுத்தாளராகப் பெறுகிறார். ஆனால் அப்போது அவர் காற்றோடு காற்றாகிப் போயிருந்தார்.

தமிழ்ச் சிறுகதை உலகின் பிதாமகன் என்னும் பட்டத்தை புதுமைப்பித்தனோடு கு. அழகிரிச்சாமிக்கும் நாம் வழங்கலாம். கோப்பையை இரு அணிகள் பகிர்ந்து கொள்வது போல …

16 வயதில் எழுதத் தொடங்கிய ஒருவன் தன் எழுத்தின் மீது நம்பிக்கை கொண்டு தன் தேடுதல்கள், கற்றல் மீது அளப்பரிய காதல் கொண்டு அரசு வேலையைத் துறந்து, கவிபாடி கதை எழுதி வறுமையில் உழன்று தன்னை எழுத்தாளனாக நிலைநிறுத்துகிறான். தான் மறைந்த காலத்தில் தன் நண்பன் கி.ராவை எழுத்தாளராகத் தூண்டிவிட்டு தன்னை நீட்டித்துக் கொண்டுதான் மறைகிறான் என்ற வரலாறு குறை ஆயுள் என்றாலும் நிறைவாழ்வு தந்த பாரதியை நினைவூட்டுகிறது.”
பக்.9.

கரிசல் இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரும் சாகித்ய அகாடமி விருதாளருமான கு.அழகிரிசாமியின் நூற்றாண்டை ஒட்டி அவருடைய வாழ்க்கை, படைப்புகள் பற்றி நூல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அந்தவகையில் வெளிவ ந்திருக்கும் நூல்களில் ஒன்றுதான் “கு.அழகிரிசாமி- கரிசல் எழுத்தாளனின் படைப்புலக வாழ்வு.”

நூலாசிரியர் அரங்கசாமி சக்தி செல்வன் மணப்பாறையைச் சேர்ந்த பள்ளித் தாளாளர், கவிஞர், எழுத்தாளர் என்று பன்முகத்தன்மை கொண்டவர்.

எழுத்தாளர், ஓவியர், மொழி பெயர்ப்பாளர், பத்திரிக்கை யாளர் என்ற பன்முகத்தன்மை கொண்ட கு.அழகிரிகாமியின் படைப்புல வாழ்க்கையை மட்டும் பேசும் நூல் இது. 40 பக்கங்களைக் கொண்ட சிறிய நூல் என்றாலும், அழகிரிசாமியின் படைப்புலகத்தின் பல பரிமாணங்களையும் சிறப்பாக எழுதியுள்ளார் ஆசிரியர்.வெளியீடு:செங்காந்தள் சோழன் பதிப்பகம்,மணப்பாறை. 9865780742..

# சா.விஸ்வநாதன்- வாசகர்பேரவை- புதுக்கோட்டை # 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top