Close
நவம்பர் 21, 2024 9:09 காலை

புத்தகம் அறிவோம்.. எம்எஸ். வாழ்வே சங்கீதம்..

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்

கிட்டத்தட்ட 2500 பாடல்களை மனப்பாடமாகத் தெரிந்து வைத்துக்கொண்டிருந்தவர். இன்றைய ஒரு சில பாடகர்கள் போல்ஸ்ருதிப் பெட்டிக்கு முன்பாக பாட்டு நோட்டை பிரித்து வைத்துக்கொண்டு பாடும் பழக்கம் அவருக்குக் கிடையாது.

நாங்கெல்லாம் பணத்துக்கு பாடறோம். சுப்புலட்சுமி மட்டும்தான் சங்கீததுக்காக பாடறா” என்பார் செம்பை. எம்.எஸ். ஆத்ம திருப்திக்காகவும் உலக அமைதிக்காகவும் பாடியவர். கச்சேரிகள் மூலமாக வந்த வருமானத்தைக் கொண்டு நிறைய சொத்துகளை அவர் வாங்கியிருக்க முடியும்.

ஆனால் சங்கீதம் தனக்குக் கொடுத்ததை தர்ம காரியங்க ளுக்கு கொடுத்து மனநிறைவடைந்தார். ஒரு புள்ளிவிவரக் கணக்குப்படி தர்மமாக எம்.எஸ்.கொடுத்த தொகை கிட்ட தட்ட மூன்று கோடி ரூபாய். (இன்றைய மதிப்பு…?) (பக். 105, 107).

சங்கீதக்கலை என்பது கொஞ்சம்கூட கஷ்டம் இல்லாமல் மோட்சம் வாங்கிக் கொடுக்கக் கூடியது. வீணா வாத்தியம் ஒன்றை வைத்துக்கொண்டு, ஸ்வர சுத்தியோடு கலந்து வாசித்து ஆனந்தமயமாக இருக்கக் கற்றுக்கொண்டால், யோகம் பண்ண வேண்டாம்.

தபஸ் பண்ண வேண்டாம். சுலபமாக மோட்சத்தையே அடைந்துவிடலாம். அதோடு யோகி யோகம் செய்தால், தபஸ்வி தபஸ் செய்தால் அவர்களுக்கு மட்டுமே ஆத்மானந்தம் உண்டாகிறது. சங்கீதம் ஒன்றில்தான் அதை அப்பியஸ்பவர் மட்டுமின்றி கேட்பவர்கள் எல்லோருக்குமே அதே அளவு ஆத்மானந்தம் உண்டாகிறது.”என்றுகாஞ்சி பெரியவர் சொன்னதாக எம்.எஸ்(பக்.115).

ஆசியாவின் நோபல் பரிசு என்று கருதப்படும் மகாசேசே விருது வழங்கும் விழாவில் வாசிக்கப்பட்ட பாராட்டுப் பத்திரத்தில் ‘லட்சக்கணக்கான இந்தியர்கள் மத்தியில் பத்தியையும் ஆன்மீகத்தையும் பரப்பும் திருமதி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பொதுச் சேவைக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.

நான்கு தலைமுறையாக மக்களை மேம்படுத்தும் பக்திப் பாடல்களைப் பாடி வருவதற்காகவும் பொதுநலன்களுக்காக பெருந்தன்மையோடு உதவி வருவதற்காகவும் சுப்புலட்சு மிக்கு அளிக்கப்படும் அங்கிகாரம் இது’ என்று குறிப்பிட்டி ருந்தது(பக்.119).

திருப்பதி வெங்கடாசலபதி உட்பட பலரும் “பாரத ரத்னா” எம்.எஸ்ஸின் (மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி) சுப்ரபாதம் கேட்டுதான் கண் விழிப்பது என்பதை வழங்கமாகக் கொண்டிருக்கின்றனர்.
அவர் மிகச்சிறந்த பாடகி மட்டுமல்ல மிகச்சிறந்த சமூக சேவகியும் கூட. தான் சம்பாதித்ததில் பெரும்பகுதியைத் தானமாக வழங்கியவர். அந்த உன்னத மனுஷியைப் பற்றிய வாழ்க்கை வரலாறுதான்”எம்.எஸ்” வாழ்வே சங்கீதம் நூல்.
எம்.எஸ் வாழ்க்கையின் உன்னதான அம்சங்களை சிறப்பாக இந்நூலில் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர் வியெஸ்வி. இவர் சிறந்த இசை விமர்சகரும்கூட.

தனது கணவர் சதாசிவத்துடனான ஆத்மார்த்தமான உறவு, சதாசிவத்தின் மறைந்த முதல் மனைவியின் குழந்தைகளை தன் குழந்தைகளாகப் பேணியது, சம்பாதித்தை சமூகத்திற்கு பகிர்தளித்தது, எம்.எஸ்ஸின் தேசபக்தி, தெய்வபக்தி, தமிழ்ப் பற்று என்று அனைத்தும் அழகாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது இந்நூலில்.வெளியீடு, கிழக்கு பதிப்பகம்,சென்னை.

# சா.விஸ்வநாதன்-வாசகர் பேரவை- புதுக்கோட்டை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top