Close
செப்டம்பர் 28, 2024 3:13 மணி

புத்தகம் அறிவோம்.. தெய்வம் என்பதோர்..

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்

மரபு வழிப்பட்ட தமிழ்ச்சமூகம் சாதிய அடுக்குகளால் ஆனது. ‘சாதிகளை மீறிய தனிநபர்’ என்று மரபுவழி சமூகத்தில் யாருமில்லை. எனவே சமூகம் ஆக்கிய எல்லா நிறுவனங் களிலும் கருத்தியல்களிலும் சாதியும் அவற்றின் அடையா ளங்களும் எல்லைகளும் கவனமாக பொதிந்து வைக்கப் பட்டுள்ளன.

நிலமானிய சமூக அமைப்பில் உற்பத்தித் தளங்களும் காலமும் வெளியும் சாதிய படிநிலைக்கேற்பவே பங்கிடப்பட்டன. சமூகத்தின் அடித்தள மக்களின் ஆன்மீகத் தளத்திலும் சாதிப்படிநிலை மரபுகள் கடுமையாக விதிக்கப் பட்டன. மரபுகள் மீறப்படும்பொழுது முயன்றவர்கள் நேரடி வன்முறைக்கு ஆளானார்கள். நந்தன் கதை அதற்கு எடுத்துக்காட்டு(பக்.76).

பெருந்தெய்வமோ நாட்டார் தெய்வமோ திருவிழா நாட்களில் சுற்றிவரக் கூடிய நிலப்பகுதியே அத்தெய்வத்தின் அருளாட்சி எல்லையாகும். ஒடுக்கப்பட்ட மக்களின் குடியிருப்புகள் பெறுவாரியான மக்கள் வணங்கும் தெய்வங்களின் அருளாட்சி எல்லையில் இருந்து வெளியே தள்ளப்பட்டுள்ளன.

எனவே தெருவில் வலம் வரும் தெய்வங்கள் இம்மக்களின் குடியிருப்புப் பகுதிகளுக்கு வருவதில்லை. தங்கள் வாழ்விடத்தருகில் மாலை அணிவித்தோ, சூடம் ஏற்றியோ, பொங்கல் இட்டோ, தேங்காய் உடைத்தோ வழிபடும் வாய்ப்பு இம்மக்களுக்கு இயல்பாகவே மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் மேல்சாதித் தெய்வங்களின் ‘அருள் வரம்புக்கு’விலக்கப்பட்ட மக்கள் அவற்றின் ‘அதிகார வரம்புக்கு’ மட்டும் உட்படுத்தப்பட்டனர்(பக்.77).
“மரபும் மீறலும் – சாதி சமய அரசியல் பின்னணி” கட்டுரையில்.

தொ.ப.விற்கு தமிழ் சமூகத்தின் அறியப்படாத மரபுகளை, பண்பாடுகளையும் வெளிக்கொணர்ந்ததில் பெரும்பங்குண்டு . தமிழ்ச்சமூகம், நாட்டுப்புற இலக்கியம், வழிபாட்டு முறைகள் ஆகியவற்றில் அறியப்படாமல் இருந்த செய்திகளை தன் ஆய்வின் மூலமாகவும், எழுத்தின் மூலமாகவும் அறிமுகப் படுத்தியுள்ளார். அப்படிப்பட்ட நூலில் ஒன்றுதான் இது.

இந்த நூலில்,
தாய்த் தெய்வம்,
பழையனூர் நீலி,
உலகம்மன்,
வள்ளி,
சித்திரகுப்தன்,
ஒரு சமணக் கோயில்,
தமிழக ஆன்மீக வரலாற்றில் வள்ளலார்,
ஆழ்வார் பாடல்களும் கண்ணன்பாட்டும்,
பண்பாட்டுக் கலப்பு ,
சடங்கியல் தலைமையும் சமூக அதிகாரமும்,மரபும் மீறலும் – சாதி, சமய, அரசியல் பின்னணி,பெரியாரியலும் நாட்டரா தெய்வங்களும் ,இந்திய தேசிய உருவாக்கத்தில் பார்ப்பனியத்தின் பங்கு ,பேரா.கா.சிவத்தம்பியின் பக்தி இலக்கிய ஆய்வுகள், சமய நல்லிணக்கம் – பெரியாரியப் பார்வையில்என்ற தலைப்புகளில் 15 கட்டுரைகள் உள்ளன.காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.

# சா.விஸ்வநாதன்- வாசகர் பேரவை-புதுக்கோட்டை#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top