“தமிழகத்திலிருந்து பல்வேறு குடிமைப்பணிகளுக்குத் தேர்வான 27 இளைஞர்களைப் பற்றிய குறிப்போடு அவர்களுடைய அனுபவங்களையும், ஷபிமுன்னா தொகுத்துள்ள இந்த நூல் மிகவும் முக்கியமானது.
இளைஞர்களுடைய ஐயங்களுக்கு மறைமுகமாக விளக்கம் தரும்வகையில் அமைந்திருப்பதோடு, வெற்றி பெற்றவர் களையும் கௌரவிக்கும் வகையில் இந்நூல் எழுதப்பட்டுள் ளது. வெற்றிபெற்றவர்களின் புகைப்படங்களும் பெட்டிச்செய்திகளும் வாசிப்பை தூண்டும் வகையில் அமைந்திருக்கின்றன. “
–வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் இந்நூலிற்கு எழுதிய அணிந்துரையிலிருந்து…
“ஐ.ஏ.எஸ்., அல்லது ஐ.பி.எஸ் கனவு மெய்ப்படத் தேவையான செயல்நோக்கமும், ஆர்வமும், தகவல்களும் இந்த நூலில் கிடைக்கும். வெற்றிபெற்றவர்கள் கடந்து வந்த கடினமான பாதை, அவர்கள் எந்தவிதத்தில் தம்மை தயார்படுத்தினார்கள் என்ற போர்த்திட்டம் இந்த நூலில் தாராளமாகக் கிடைக்கும்…
“வெற்றியாளர்கள் செய்து விட்ட தவறுகள் அவற்றைத் திருத்திய விதம், அவர்கள் பட்டபாடு, அவர்கள் தரும் அறிவுரைகள் போன்றவை யு.பி.எஸ்.சி.தேர்வு எழுத துணிப வர்களுக்கு பயனுள்ளதாக அமையும். அவர்கள் பயிற்சி அனுபவமும், பணி அனுபவமும் அவர்கள் நிகழ்த்தி சாதனை களும் தேர்வாளர்களுக்கு சிலிர்ப்பட்டும் செயல் ஆர்வத்தை பல மடங்கு அதிகரிக்கும்.
“ஒர் ஐ.ஏ.எஸ். ஆவது எப்படி என்று பலரும் நூல் எழுதியிருக் கிறார்கள். ஆனால் அவை ஒருவருடைய அறிவுரையாகவே இருக்கும். ஆனால் இங்கு 27 வெற்றிபெற்ற மனிதர்களின் ஆலோசனைகளைத் தொகுத்து வழங்கியிருக்கிறார் ஆசிரியர். எனவே ஐ.ஏ.எஸ்.ஆவதற்கு துடிக்கும் இளைஞர் களுக்கு இது முழுமையான வழிகாட்டியாகவும் இருக்கும்.
“வென்றவர்களிடம் அப்படி என்னதான் இருக்கிறது? அவா்கள் எத்தனை முறை வெற்றியை இழந்தார்கள்? இறுதியில் எப்படி வென்றார்கள் என்ற பல வியப்பூட்டும் சாதனைகளை உள்ளடக்கிய இந்நூலை பெற்றோர்களும் மாணவர்களும் நிச்சயம் படிக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துவேன்.”
–செ.சைலேந்திரபாபு ஐபிஎஸ்..தனது அணிந்துரையில்…
‘இந்து தமிழ் திசை’ ‘வெற்றிக்கொடி’ என்ற தனி இலவச இணைப்பில் (தற்போது அந்த 4 பக்க இணைப்பு வருவதில்லை) வந்த கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல்.125 ரூபாய்க்கு நீங்கள் ஒரு ஐ.ஏ.எஸ். ஆகலாம் தவறினால் ஏதேனும் அரசுப்பணியைப் பெறலாம்.இந்து தமிழ்திசை வெளியீடு.
பின்குறிப்பு.
இந்த நூலில் உள்ள மேற்குவங்கத்தில் பணியாற்றும் விமலா, திருமணமாகி 7 ஆண்டுகளுக்குப் பின், ஐ.ஏ.எஸ். ஆனவர். அப்போது அவருக்கு இரட்டைக் குழந்தைகள் இருந்தது. அவர் தேர்வு பெற்ற 2010 ஆண்டில் புதுக்கோட்டை மன்னர் கல்லூரிக்கு அழைந்து வந்து, நாட்டின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி அம்மையார் பிறந்தநாளில் உரையாற்ற வைத்தோம்.அது ஒரு காலம்!
# சா.விஸ்வநாதன்-வாசகர் பேரவை- புதுக்கோட்டை #