Close
நவம்பர் 22, 2024 3:11 காலை

கருநாடகத் தமிழ் விருதுகள் 2023… தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம் அறிவிப்பு

karnataka

பெங்களூரு புத்தகத்திருவிழா

கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் வழங்கப்படும்  பெங்களூரு 2-ஆம் தமிழ்ப் புத்தகத் திருவிழா 2023 -ஆம் ஆண்டுக்கான கருநாடகத் தமிழ் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருநாடகத்தில் தமிழுக்கும் தமிழர்களுக்கும் தொண்டாற்றிய சான்றோர் பெருமக்களுக்கு ஆண்டுதோறும் கருநாடகத் தமிழ்ப் பெருந்தகை விருது, கருநாடகத் தமிழ் ஆளுமை விருது வழங்கப்பட்டு வருகிறது.

2023-ஆம் ஆண்டுக்கான கருநாடகத் தமிழ்ப் பெருந்தகை விருது, கருநாடகத் தமிழ் ஆளுமை விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல்:

கருநாடகத் தமிழ்ப் பெருந்தகை விருது:

1. அறிஞர் குணா.

கருநாடகத் தமிழ் ஆளுமை விருது:

1. புலவர் கி.சு.இளங்கோவன்(தமிழ் இலக்கியம், சிற்றிதழ்)
2. திரு.ந.இராமசாமி(அரசியல்)
3. திரு.சு.கலையரசன்(தமிழ் இதழியல்)
4. பேரா.பிரான்சிஸ் போர்ஜோ(தமிழ் அமைப்பு)
5. திரு.வின்சென்ட் ஜோசப்(தமிழ்ப்பணி)
6. புலவர் மணிவண்ணன்(தமிழ் ஆசிரியப்பணி)
7. திரு.விட்டல்ராவ்(தமிழ் இலக்கியம்)
8. திரு.நல்லதம்பி(தமிழ் இலக்கியம்)
9. திரு.இராம.சுப்பிரமணியம்(தமிழ் இதழியல்)
10. திரு.சி.தண்டபாணி(தமிழ் அமைப்பு)
11. திரு.தி.லட்சுமிபதி(தமிழ்ப் பள்ளி)
12. பேரா.உ.பசவராஜ்(தமிழ் ஆசிரியப்பணி)
13. திரு.இராசு.மாறன்(தமிழ் அமைப்பு, சிற்றிதழ்)
14. திரு.நாம்தேவ்(தமிழ் இதழியல்)
15. அருள்தந்தை ஜெரால்டு வளன்(தமிழ்ப்பணி)
16. அருள்தந்தை ஆரோக்கியநாதன்(தமிழ் வானொலி, இலக்கியம்).
17. பாவலர் இராம.இளங்கோவன்(தமிழ் இலக்கியம்)
18. திரு.முகமது காசிம்(தமிழ் சிற்றிதழ்)
19. புலவர் கார்த்தியாயினி(தமிழ் ஆசிரியப்பணி)
20. திரு.சன்ரைஸ் நரசிம்மன்(தொழில், தமிழ்ப்பணி)
21. அரிமா ஜி.மோகன்(தொழில், தமிழ்ப்பணி)
22. திரு.எட்வின்குமார்(தமிழ் நாடகம்)
23. திரு.பா.தே.அமுதன்(தமிழ் இதழியல்)
24. திரு.சு.மதுசூதனபாபு(தமிழ்ப்பணி, பள்ளி)
25. திரு.ந.இராமச்சந்திரன்(தமிழ்ப்பணி)

கருநாடகத்தில் தமிழ்மொழியை கற்பிக்கும் பணியில் தளராமல் ஈடுபட்டு வரும் பள்ளி, கல்லூரிகளை பாராட்டி 2023ஆம் ஆண்டு முதல் கருநாடக சீர்மிகு செந்தமிழ்ப் பள்ளி விருது, கருநாடக சீர்மிகு செந்தமிழ்க் கல்லூரி விருது வழங்கப்படும். இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி, கல்லூரிகளின் பட்டியல்:

கருநாடக சீர்மிகு செந்தமிழ்ப் பள்ளி விருது

1. ஆரம்பப்பள்ளி: தூய‌ அல்போன்சியார் பள்ளி, பெங்களூரு
2. உயர்நிலைப்பள்ளி: ஸ்ரீவெங்கடேஷ்வரா செந்தில்குமரன் உயர்நிலைப்பள்ளி, பெங்களூரு, குளூனி கான்வென்ட பள்ளி, பெங்களூரு.

கருநாடக சீர்மிகு செந்தமிழ்க் கல்லூரி விருது

1. புகுமுக கல்லூரி: ஆர்.பி.ஏ.என்.எம்.எஸ். பி.யூ. கல்லூரி, பெங்களூரு.
2. முதனிலைக் கல்லூரி: புனித ஜோசப் பல்கலைக்கழகம், பெங்களூரு.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top