Close
அக்டோபர் 5, 2024 7:08 மணி

பெங்களூரு இரண்டாம் தமிழ்ப் புத்தகத் திருவிழா(2023): சிறந்த நூல் போட்டி முடிவுகள் அறிவிப்பு

பெங்களூரு

தமிழ்ப் புத்தகத்திருவிழா-2023

பெங்களூரு இரண்டாம் தமிழ்ப் புத்தகத் திருவிழா- 2023 வின் சிறந்தநூல் போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் தமிழ்ப் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு கருநாடக மற்றும் தமிழக தமிழ் இலக்கியவாதிகள், பதிப்பாளர்களுக்காக நடத்தப்பட்ட சிறந்த தமிழ்நூல் போட்டியில் சிறந்ததாக தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் விவரம் வருமாறு:

முதல் பரிசு: ரூ.5,000.
சங்க இலக்கியம் ஒரு புதிய கண்ணோட்டம்
பேரா.பாலசுந்தரம் இளையதம்பி.

இரண்டாம் பரிசு: ரூ.3,000.
தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேரா.முனை.ப.மருதநாயகம்
இலக்குவனார் திருவள்ளுவன்.

மூன்றாம் பரிசு: ரூ.2,000
அலைவீசும் நிலாவெளிச்சங்கள்
-கவிஞர் கே.ஜி.இராஜேந்திரபாபு.

சிறப்புப்பரிசு: ரூ.2,000
கனவொளியில் ஒரு பயணம்
-ஜெய்சக்தி

ஊக்கப்பரிசு: தலா ரூ.1000.
1. 100 சிறுவர் கதைகள்-எம்.சி.ஞானபிரகாசம்.
2. நிலாச்சோறு இலட்சுமி-குமரேசன்.
3. வண்ணமுகங்கள்-விட்டல்ராவ்.
4. தெய்வீக ஆறுகளும் பெருமைகளும்-பேரா.சொ.மீ.சுந்தரம்
5.புலம்பெயர்தமிழர்கள்வாழ்வு-இருப்பு-படைப்பு-பேரா.ச.சீனிவாசன்.
6. தமிழ் இலக்கியங்களில் பயனுள்ள சமூக சிந்தனைகள்-பேரா.முனை.பெ.கணேஷ்.
7.புத்தரின்அற்புதமானஅறிவுரைகள்-ரா.முனை.பெ.கணேஷ்.
8. தவசு-இளங்கோ. கண்ணன்.
9. உலகின் முதல்மொழியான தமிழ் மேலும் செழிக்க வழிகள்-பேரா.பெ.சுப்பிரமணியனார்.
10. கவியரசர் ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி-ஜெய்சக்தி.
11. எழு ஞாயிறு எழுகவே-பா.மூர்த்தி.
12. நீங்கள் நிராகரித்த நான்-ஆர்க்காடு இராஜா முகம்மது.
13. காலத்தை செதுக்கிய உளிகள்-ஆ.பிரமநாயகம்.
14. சொல்லழகு-தங்கவயல் தமிழ்மறவன்.
15. திருவள்ளுவமாலை-எஸ்.லூகாஸ்.

சிறந்தநூல் போட்டிக்கான பரிசுகள் டிச.2 -ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறும்  விழாவில் வழங்கப்படும் என தமிழ்ப் புத்தகத்திரு விழாவின் மதிப்புறுதலைவர் பேராசிரியர், முனைவர் கு.வணங்காமுடி, தலைவர்  ந.முத்துமணி, செயலர் ஆ.வி.மதியழகன், பொருளாளர் க.தினகரன்வேலு ஆகியோர்  தெரிவித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top