Close
ஜூலை 8, 2024 10:13 காலை

புத்தகம் அறிவோம்..இதயத்தை நோக்கி இரு உரைகள்..

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்-இதயத்தை நோக்கி இரு உரைகள்

உங்களுக்கு இந்த நிலத்தை விற்போமானால், இந்தக் காற்று எங்களுக்கு விலைமதிப்பற்றது, சூழலின் வாழ்வு அத்தனையும் அது தாங்குகிறது என்பதை நினைவிருத்துவீர்களாக. என்னுடைய தாத்தனுக்கு அவனுக்கு முதல் மூச்சையும் கடைசி சுவாசத்தையும் இந்தக் காற்றுதான் அருளிற்று.

இதே காற்று தான் எங்கள் குழந்தைகளுக்கு இந்த வாழ்க்கையின் ஆதாரத்தையே தருகிறது. ஒரு வேளை நாங்கள் இந்த நிலத்தை தருவோமானால், நீங்கள் அதைப் புனிதமாகப் போற்றி, நறுமலர்களின் இன் மணம் தோய்ந்த காற்றை மனிதர்கள் அங்கு சுவாசிக்க ஏதுவாக நீங்கள் அந்த நிலத்தைப் பாதுகாக்க வேண்டும்.

தாயின் இதயத்துடிப்பை உணரும் பிறந்த குழந்தையைப் போல இந்த பூமியை நாங்கள் நேசிக்கிறோம். ஆதலால் இதை உங்களுக்கு நாங்கள் கொடுப்பேமாயானால், நாங்கள் நேசித்ததுபோல் நீங்களும் இந்த பூமியை நேசிக்க தெரிந்துகொள்ளுங்கள் அதன்பால் எங்களைப் போலவே கரிசனம் கொள்ளுங்கள். இந்த நிலத்தைப் பெற்றுக்கொள்ளும்போது அது இருந்த விதமாகவே நீடிக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இனிவரும் சந்ததி களுக்காக இந்த நிலத்தை நேசமுடன் வைத்திருங்கள்(பக்.10-12).

தங்களுடைய நிலத்தைக் கேட்ட அமெரிக்க குடியரசு தலைவருக்கு செவ்விந்திய சமூகத் தலைவன் ஸீயாட்டில் 1852-ல் எழுதியதிலிருந்து.என்னை மன்னித்துவிடுங்கள். நான் பேரரசனாக விரும்பவில்லை. அது என்னுடைய வேலையுமில்லை. எவரொருவரையும் அதிகாரம் செய்யவோ அல்லது அடிபணியச் செய்யவோ நான் விரும்பவில்லை.மாறாக, நான்அனைவருக்கும் உதவவே விரும்புகிறேன். முடியும் பட்சத்தில், யூதர்களுக்கும், கருப்பர்களுக்கும், வெள்ளையர்களுக்கும் உதவவே விரும்புகிறேன்.

அதிகமாக சிந்திக்கிறோம். ஆனால் குறைவாகவே உணர்வு வயப்படுகிறோம். இயந்திரமயத்தைவிட மனித நேயமே நமது தேவை. புத்திசாலிதனத்தை விட அன்பும் மென்மையுமே நமது தேவை. இந்தப் பண்புகள் இல்லாவிட்டால் வாழ்வு வன்முறையானதாக மாறிவிடும். அனைத்தும் அழிந்துபோகும்.

ஒரு புதிய உலகத்திற்காக போரிடுவோம்! அது நாகரீகமான உலகம்! அது மனிதர்களுக்கு பணியாற்றும் வாய்ப்பை அளிக்கும். இளைஞர்களுக்கு வளமான எதிர்காலத்தை அளிக்கும். வயதானவர்களுக்கு பாதுகாப்பை அளிக்கும். விமானமும் வானொலியும் நம்மை நெருக்கப்படுத்தியிருக்கிறது. இந்த கண்டுபிடிப்புகளின் நோக்கம் மனிதர்களிடம் நல்ல பண்பைக் கொண்டுவருவதற்கும், உலகளாவிய சகோதரத்துவத்தை உருவாக்குவ தற்கும், நாம் ஒன்றிணைவதற்குமானது.

யாரையும் வெறுக்காதீர்கள். அன்பிள்ளாதவர்களும், இயற்கைக்கு விரோதமானவர்கள் மாத்திரமே வெறுப்பார்கள். வீரர்களே! அடிமையாவ தற்கு போராடாதீர்கள். சுதந்திரமடைவதற்கு போரிடுங்கள்.(பக்.15,16,17). தி கிரேட் டிக்டேட்டர்” திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் சார்ளி சாப்ளின் பேசும் உரையிலிருந்து.

தன்னறம்-குக்கூ காட்டுப்பள்ளி வெளியிட்டுள்ள, இந்நூலில் உங்க இரு உரைகளும் 100 ஆண்டு கடந்தது என்றாலும் இன்றும் தேவைப்படும் உரைகளாகும்.செவ்விந்திய தலைவன் எழுதியுள்ளதை இன்று விளை நிலங்களை இழப்பதற்கு தயாராக இல்லாத மக்களின் உணர்வுக ளோடு பொறுத்திப் பார்த்தால் உண்மை புரியும்.அதே போலதான் சார்லி சாப்ளின் உரையும்.

வெளியீடு:தன்னறம் நூல்வெளி,குக்கூ காட்டுப்பள்ளி,புளியானூர் கிராமம். சிங்காரப்பேட்டை அஞ்சல் ,கிருஷ்ணகிரிமாவட்டம் 635307.9843370059.

#சா.விஸ்வநாதன்-வாசகர்பேரவை-புதுக்கோட்டை#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top