சன்மார்க்க பால பாடம் முன் தொடக்கநிலை…
அதிகாலை எழு
அருள்பெற முயல்
அடியாரை நேசி
அழுக்காடை வேண்டாம்
ஆன்மநேயம் கொள்
ஆசாரம் வேண்டா
ஆகாரம் அரைகொள்
ஆருயிர்க்கு அன்புசெய்
இன்சொல் பேசு
இடம் தனித்திரு
இச்சையின்றி நுகர்
இடதுபக்கம் படு
இயலாதோர்க்கு உதவு
இறந்தாரைப் புதை
ஈக பொருளை
ஈட்டுக அருளை
உயிர்ப்பலி வேண்டா
உயிர்நலம் பரவுக
ஊக்கம் பெறுக
எண்ணெய் தேய்த்து முழுகு.
ஏழைக்கு இரங்கு
ஐயம் அகற்று
ஒன்றே கடவுள்
ஓதி உணர்க
ஒளவியம் தவிர்
கள்குடி வேண்டா
கரிசாலை உட்கொள்
கீரைகள் விரும்பு
குருவை வணங்கு
கொடுஞ்சொல் கேளேல்
கொடுமை செய்யேல்
கொலைபுலை தவிர்
கொல்லா நெறி நில்
கோபம் கொள்ளேல்
கோள்தனைச் சொல்லேல்
சங்கத்தில் சேர்
சன்மார்க்கம் பயில்
சடங்குகள் வேண்டா
சத்விசாரம் செய்
சாதியை மற
சிறு தெய்வம் சேரல்
சிறு சிறு உதவிசெய்
சிக்கனமா யிரு
சோறு போடு
ஜோதியை வணங்கு
தந்தைசொல் மீறேல்
தருமம் தவறேல்
தயவுடன் நோக்கு
தன்முனைப் புறேல்
தன்னை உணர்
தாய்ச்சொல் கேள்
தானம் வழங்கு
திருக்குறள் பயில்
திருவருட்பாப் படி
தினமும் தொண்டு செய் தீமைகள் பண்ணேல்
தெய்வம் இகழேல்
தைப்பூசம் காண்
தோத்திரம் செய்க
நண்பனை நேசி
நல்லன யோசி
நல்லநூல் வாசி
நற்றமிழ்பேசு
பசித்தோர் முகம் பார்
பசித்தபின் புசி
பகலில் உறங்கேல்
பயமே வேண்டா
பத்தியில் பழகு
பாடிப் பணிக
பாவம் செய்யேல்
பிறர்குறை பேசேல்
புலைத்தொழில்புரியேல்
புகைப்பதை நோக்கேல்
புறங்கூற வேண்டா
புருவத் திடை நினை
பெரியோரை மதி
பெண்டீரைப் போற்று
பெருங்குணம் பற்று
பேதிக்கு மருந்து கொள் பொறாமை கொள்ளேல்
பொய்யை ஒழி
மனிதனை மதி
மதுவைக் குடியேல்
மரங்களை வெட்டேல்
மலசலம் அடக்கேல்
மாலையில் உலவு
மாமிசம் உண்ணேல்
வன்மொழி பகரேல்
வடலூர் வந்து செல்
வள்ளலை வணங்கு
வாய்மையில் நில்
வீணுக்கு அழேல்
வெறுத்துப் பேசேல்
வையகம் போற்று.
வடலூர் முனைவர் இராம.பாண்டுரங்கன் இயற்றியது.
வெளியீடு: திரு அருட்பா ஆ.பாலகிருஷ்ண பிள்ளை நினைவு அறக்கட்டளை,விழுப்புரம் 605601-9442170011.
# சா.விஸ்வநாதன்-வாசகர்பேரவை- புதுக்கோட்டை #