Close
நவம்பர் 21, 2024 6:37 மணி

புத்தகம் அறிவோம்… இந்தியாவின் எதிர்காலம்…

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்- இந்தியாவின் எதிர்காலம்

நான் மலபாரில் பார்த்ததை விட மடத்தனம் உலகில் வேறு எங்காவது இருக்க முடியுமா? பாவம் மேல் ஜாதியினர் நடக்கும் தெருக்களில் கூட கீழ்சாதியினர் அனுமதிக்கப்படுவதில்லை.

அவனே தன் பெயரை தாட் பூட்டென்று ஆங்கிலப் பெயராக மாற்றிக்கொண்டால் எல்லாம் சரியாகிவிடும், முகமதியப் பெயரை வைத்துக்கொண்டாலும் எல்லாம் சரியாகிவிடும்.

அந்த மலபார் வாசிகளை பைத்தியங்கள் என்று நினைப்ப தைத் தவிர, அவர்கள் வீடுகளையெல்லாம் பைத்தியக்கார விடுதிகள் என்பதைத் தவிர வேறு என்னவென்று நினைப்பது? அவர்கள் தங்கள் பழக்கங்களை மாற்றிக்கொண்டு நல்ல வழியில் நடக்கும்வரை இந்தியாவில் உள்ள ஒவ்வோர் இனத்தினரும் அவர்களை வெறுப்பாக நடத்த வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்த முடிவுக்கு வருவது? இத்தகைய கொடூரமான மிருகத்தனமான பழக்கங்களை அனுமதித்திருக்கிறார்கள்.

சொந்தக்குழந்தையை பட்டினியில் சாகுமாறு விட்டுவிடுகி றார்கள், ஆனால் அவர்கள் மதம் மாறிவிட்டார்களானால் சாப்பாடு போடுகிறார்கள்.என்ன வெட்கக்கேடு! ஜாதிகளிடையே இனியும் சண்டை இருக்கக்கூடாது.

உயர்ந்ததைத் தாழ்த்து வதல்ல, தாழ்ந்ததை உயர்த்துவதே தீர்வு (பக்.42-43).

சில நூல்கள் இருக்கின்றன; அவற்றில் சூத்திரன் வேதத்தைக் கேட்டால் அவனது காதுகளில் ஈயத்தை காய்ச்சி ஊற்றுங்கள்; ஒரு வரிகூட நினைவில் வைத்திருந்தால் அவன் நாக்கை வெட்டுங்கள். “ஏ பிராமணா”என் அவன் அழைத்தால் அவன் நாக்கை வெட்டிவிடுங்கள்’ என்பன போன்ற கொடூரமான கருத்துக்கள் இருக்கின்றன. இவை மிருகத்தனமான பழங்கால காட்டுமிராண்டித்தனம். அதில் சந்தேகமே இல்லை. இதை யாரும் சொல்ல வேண்டியதில்லை(பக்.47-48).

1897ல் சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பினார். அவர் கல்கத்தா செல்லும் வழியில் சென்னை யில் 9 நாட்கள் தங்கியிருந்து நிகழ்த்திய 6 சொற்பொழிவு களுள் பிப்ரவரி 14 ல் ஹார்ம் ஸ்டன் வளாகத்தில் நிகழ்த்திய சொற்பொழிவின் தமிழாக்கமே இந்த சிறுநூல்.

இந்த சொற்பொழிவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சொற்பொழிவு. சென்னை இளைஞர்கள் பால் தனக்குள்ள நம்பிக்கையை இந்த சொற்பொழிவில் குறிப்பிடுகிறார். மேலும் இந்தியாவிற்கான தற்போதைய உடனடி தேவை மனிதனை உருவாக்கும் கல்வி, ஒற்றுமைப்படுத்தப்பட்ட சமூகம் என்கிறார் சுவாமி.

எது இல்லையென்றால் சமூகம் தன்னை கீழானவனாகக் கருதுமோ அதை அடைவதற்கு முயற்சிக்கவேண்டுமே தவிர மற்றவர்களை குறை சொல்லிக் கொண்டு வாளாவிருக்கக் கூடாது என்கிறார்.
4 கோடி ஆங்கிலேயர்கள் 30 கோடி இந்தியர்களை ஆட்சி செய்வதற்கு முக்கிய காரணம் அவர்களின் சிந்தனை எல்லாம் ஒரு சேர ஓரிடத்தில் குவிகிறது; அதனால் அவர்கள் சக்தி பெறுகிறார்கள். ஆனால் நாம் பல வகையிலும் பிரிந்து கிடக்கிறோம். வலிமை பெற “நீங்கள் அனைவரும் ஒரே மனத்தவராக இருங்கள். நீங்கள் எல்லோரும் ஒரே எண்ணம் உடையவர்களாக இருங்கள் “என்று வேண்டுகோள் வைக்கிறார் சுவாமி.ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியீடு.
ரூ.18.

# சா.விஸ்வநாதன்- வாசகர் பேரவை- புதுக்கோட்டை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top