திருமயம் கிளை நூலகத்தில் வாசகர் வட்டம் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
திருமயம் தீரர் சத்தியமூர்த்தி கிளை நூலகத்தில் வாசகர் வட்டம் சார்பில் நடைபெறும் பொங்கல் விழாவை முன்னிட்டு திருமயம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் 100 மாணவர்களுக்கு, அஞ்சலக பயன்பாட்டை ஊக்குவிக்கவும், பொங்கல் வாழ்த்துகள் அனுப்பும் வழக்கத்தை நினைவு கூறவும் அனைத்து மாணவர்களுக்கும் அஞ்சல் அட்டையும், கலர் பென்சிலும் வழங்கப்பட்டது.
பெறுநர் முகவரியுடன் தாங்கள் தயாரித்துள்ள அஞ்சல் அட்டையை தலைமை ஆசிரியரிடம் மாணவர்கள் வழங்க வேண்டும் எனவும், ஒவ்வொரு வகுப்பிலும் சிறப்பாக செய்துள்ள மூன்று மாணவர்கள் என மொத்தம் 15 நபர்களுக்கு பொங்கல் விழாவில் பரிசு வழங்கப்படும் என்று வாசகர் வட்ட நிர்வாகிகள் அறிவித்திருந்தனர்.
இதையடுத்து, திருமயம் தீரர் சத்தியமூர்த்தி கிளை நூலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில், திருமயம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் வி. கிருஷ்ணமூர்த்தி, தோட்டக்கலை உதவி இயக்குநர் என். தீபா தேவி, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை அருள் ஆரோக்கியமேரி, திருமயம் கோட்டை ரோட்டரி சங்க தலைவர் கே.கபூர், வர்த்தக சங்கத்தலைவர் கே. கருப்பையா, வேதாந்திரி யோகா அறக்கட்டளை நிர்வாகி சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பாக அஞ்சல் அட்டை தயாரித்த மாணவ, மாணவிகள் 15 பேருக்கு பரிசளித்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை வாசகர் வட்ட தலைவர் திரு க.மீனாட்சிசுந்தரம் து.தலைவர் க.பிரபாகர், செயலாளர்கள் மு.மாலதி, கோ.ராதா மற்றும் வாசகர் வட்ட உறுப்பினர்கள் செய்திருந்தனர்.