Close
நவம்பர் 23, 2024 9:51 காலை

புத்தகம் அறிவோம்… சுவாமி விவேகானந்தர் வரலாறு..

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்- சுவாமி விவேகானந்தர் வரலாறு

ஆன்மீகத்துறையைச் சேர்ந்த பெரியோர்களின் வரலாற்றைப் படிப்பதால் பல நன்மைகள் ஏற்படுகின்றன. சுவாமி விவேகா னந்தரின் வரலாறு, சிறுவர்களின் மனோநிலையை வளர்க்கப் பெரிதும் உதவும்.

விவேகானந்தரின் தீரம், உண்மைக்காக போரிடும் தன்மை கொள்கைக்காவே துணிந்து வாழும் திறன் போன்ற பண்புகள் இளைஞர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளன. மேலும் இளைஞர்களிடையே ஒரு கொள்கைக்காக வாழும் உறுதியையும் ஆன்மீக வாழ்வில் நாட்டத்தையும் ஏற்படுத்தும் சக்தியுடையது.

இவ்வரலாறு முதியோர்களாயின் விவேகாநந்தரின் தத்துவங் களால் கவரப்பட்டு, உள்ளத்தூய்மையும், உயர்ந்த தத்துவ ஞானத்தையும் பெற முடியும்.மனே திடத்துடன் அயராது உழைத்து, கர்மம் பக்தி, ஞானம் இம்மூன்றிற்கும் எடுத்துக் காட்டாக உள்ள விவேகானந்தரின் வரலாற்றை எல்லோரும் படித்து அவர் பாதையில் செல்வது அவசியம்.

நூலின் முன்னுரையில் தத்துவஞானி டி.எம்.பி.மஹாதேவன்.

39 ஆண்டு, 5 மாதம், 24 நாட்கள் இப்பூவுலகில் வாழ்ந்து, இந்த தேசத்தின் இளைஞர்களுக்கு இன்றும், என்றும் உத்வேகம் ஊட்டிக் கொண்டிருக்கும் சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் இன்று, ஜன.12. 1984ல் அறிவிக்கப்பட்டு 1985 முதல் இந்த நாள்”தேசியஇளைஞர் தின”மாகக் கொண்டாடப்படுகிறது.

40 ஆண்டுகளுக்குள் வாழ்க்கை முடிந்துபோன, சுவாமி விவேகானந்தர் ,பாரதி, அமெரிக்க கருப்பினத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங். இவர்கள் விட்டுச்சென்றுள்ள தடம் இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு நிலைத்து நின்று வழிகாட்டும் சக்தி உடையது.

அ.லெ. நடராஜன் எழுதியிருக்கும் இந்த சுவாமி விவேகானந்தர் வரலாறு ,தமிழில் வெளிவந்திருக்கும் சுவாமிஜியின் வரலாற்று நூல்களில் ஆகச் சிறந்தது என்று சொல்லலாம். முதலில் 1975ல் இந்நூலை பழனியப்பா பதிப்பகம் வெளியிட்டது. மறுபதிப்பு கண்டிருக்கிறதா என்று தெரியவில்லை.

பிறப்பும் வளர்ப்பும்,ஸ்ரீராமகிருஷ்ண மடம்,அமெரிக்காவில்,
தாய் நாட்டில்,இறுதிக்காலம்என்று 5 அத்தியாயங்களாக இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது. விவேகானந்தரை மட்டுமல்ல, ராமகிருஷ்ணரையும், அன்னை சாரதாதேவியையும் அவர்களின் உபதேசங்களையும் இந்நூலின் வழி அறிந்து கொள்ளலாம். மிக எளிய நடையில், விரிவாக இந்த நூல் படைக்கப்பட்டிருக்கிறது.

அ.லெ.நடராஜன் சிறந்த வாழ்க்கை வரலாற்று ஆசிரியர். நபிகள் நாயகம்,ஏசுநாதர் , இராமலிங்கசுவாமிகள்,மகாவீரர் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றையும் இவர் எழுதியிருக்கிறார்.

எல்லா காலத்திற்கும் தேவையான மகான்களில் சுவாமி விவேகானந்தரும் ஒருவர்.அவரை வாசிப்போம்.இந்த தேசத்தையும், மக்களையும் நேசிப்போம்.

#சா.விஸ்வநாதன்-வாசகர்பேரவை-புதுக்கோட்டை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top