Close
நவம்பர் 21, 2024 11:32 மணி

புத்தகம் அறிவோம்.. மகாதேவ தேசாய்(காந்தியின் நிழல்)

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்- மகாதேவ தேசாய்

மூன்று நாட்களாக உங்கள் திறமையை நான் பார்த்து வருகிறேன். இரண்டு ஆண்டுகளாக நான் தேடிக் கொண்டி ருந்த இளைஞனை உங்களிடம் நான் கண்டுபிடித்து விட்டேன். நான் தேடிக் கொண்டிருந்த மனிதன் நீங்கள் தான் என்று சொன்னால் நம்புவீர்களா.? அந்த மனிதனிடத்தில் ஒரு நாள் எல்லா வேலைகளையும் ஒப்படைத்து விட்டு நான் ஓய்வெடுத் துக் கொள்ள விரும்புகிறேன்.

அந்த மனிதனிடம் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. நீங்கள் என்னிடம் வரவேண்டும்…. ஏனென்றால் உங்களிடம் மூன்று சிறந்த பண்புகளைக் கண்டுபிடித்திருக்கிறேன். அவை ஒழுங்கு, நம்பகத்தன்மை, புத்தி கூர்மை முதலியன. ”
(மகாத்மா காந்தி மகாதேவ தேசாயை தன் செயலராக இருக்க அழைத்தபோது, நடந்த உரையாடலை, தன் நண்பருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதன் ஒரு பகுதி.)(பக்.19).

ராஜகோபாலாச்சாரி அவர்கள் பல உள்ளங்களின் எதிரொலி யாக ஒரு அஞ்சலி அனுப்பியிருந்தார். அதிலிருந்து சில உணர்ச்சிகரமான வாங்கியங்களை மேற்கோளாகத் தருகிறேன்.

“காந்திஜியோடு நெருக்கமாகப் பழகி உறவை அனுபவித்த வர்களுக்கு சொல்லால் வருணிக்க முடியாத துக்கம் ஆகும். மகாத்மா காந்தி அவர்களுக்கு பேரிடி. மனைவிக்கும் மகனுக்கும் ஏற்படும் பேரிடியைக் காட்டிலும் பேரிடி ஆகும்.

காந்திஜிக்கும் மகாதேவிற்கும் ஏற்பட்ட உறவை விவரிக்க முடியாது. மகாதேவ் தேசாய் அவருடைய மறு உடல் காந்திஜி ஓய்வெடுத்த போது இந்த உடல் வேலை செய்யும். காந்திஜி அநாதை ஆக்கப்பட்டு விட்டார். மகாதேவ் தேசாய் காந்திஜி யின் செயல் மட்டுமல்ல. அவருடைய குரலாகும். காந்திஜி யுடன் போராடும் அன்பு நெஞ்சங்களுக்கு ஒரு பக்கபலமாய் இருந்தவர் மகாதேவ்(பக்.160).

விக்கிரக வழிபாடு என்பது காந்தியின் வாழ்க்கையில் இல்லை. ஆனால் அவர் மகாதேவின் சமாதிக்கு ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் சென்று பூக்களைப் போடுவார்.

அவர் தான் நோய்வாய்ப்பட்ட சமயத்திலும் யாரையாவது அனுப்பி பூக்களைப் போடச்சொல்வார். துர்க்காவிற்காக (மகாதேவ் மனைவி) மகாதேவ்வின் சாம்பலைச் சேகரித்து வைத்திருந்தார். தன்னுடைய நெற்றி யில் மகாதேவின் சாம்பலை தினமும் பூசிக்கொள்வார்.(பக். 161).

தமது 25 வது வயதில் காந்தியை வந்தடைந்த இளைஞர் மகாதேவ்தனது 50வது வயதில் காந்தியின் மடி மீதே உயர் துறந்தார். எந்தச் சீடனுக்கும் கிடைக்காத பெரும் பேறு இது.

மகாதேவுக்கு இரண்டு ஆசைகள் இருந்தது. ஒன்று காந்தியின் Biography யை எழுத வேண்டும். இரண்டு அவர் மடியில் உயிர் விடுவது. அவ்வளவு பேராசை ஆகாதென்று இயற்கை ஒன்றை மட்டும் வரமளித்தது.

காந்திதான் மகாதேவ் தேசாயின் இறுதிச்சடங்குகளைச் செய்தார்.இந்த வரலாறு தன்னை இழந்தவரின் வரலாறு. ஒரு செயலாளர் எப்படி யிருக்க வேண்டும் என்று உலகிற்கு எடுத்துக் காட்டி அதன்படி வாழ்ந்தவரின் வரலாறு என்கிறார் நூலாசிரியர் விப்ரநாராயணன்.

விப்ரநாராயணன் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர். பிரபல காந்தியவாதி T.D. திருமலையின் மகனாவார்.சிறுவாணி வாசகர்மையம்,கோயம்புத்தூர்.8778924880.ரூ 200.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top