எம்.ஆர்.ராதா என்ற உயர்ந்த கலைஞன், தமிழில் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஓருவரான விந்தனுக்கு, தான் சிறையிலிருந்து வெளிவந்த பின், தன் சிறைச்சாலை அனுபவங்களை , சிந்தனைகளாக்கித் தினமணி கதிருக்கு தந்த 30 வாரப் பேட்டி தான் இந்த நூல்.
எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாறு மட்டுமல்ல, தமிழ்ச் சினிமாவின் வரலாறு, தமிழக அரசியல் என்று ஆங்கிலேயர் காலம் தொடங்கி 1971 வரையிலான வரலாற்றையும் இதன் வழி அறியலாம். இந்த நூலை வாசிக்கும் போது உங்களை அறியாமலே சிரிப்பு வந்து விடும். பள்ளிக்கூடம் போகாத ஒருவரால் இவ்வளவு அழகான சிந்தனைகளை வழங்க முடியுமா. முடியும் என்கிறார் விந்தன்.சென்னை பாரதி புத்தகாலயம் வெளியீடு, விலை.ரூ.120.
# சா. விஸ்வநாதன்- வாசகர்பேரவை- புதுக்கோட்டை #