Close
ஏப்ரல் 3, 2025 11:45 மணி

புத்தகம் அறிவோம்… எமோஷனல் இன்டலிஜன்ஸ்

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்- எமோஷனல் இன்டெலிஜன்ஸ்

எமோஷனல் இன்டலிஜன்ஸ் எதையும் நல்லதென்றே பார்ப்பது. யார் மீதும் வன்மம் கொள்ளாமல் இருப்பது. எல்லோரும் நல்லவரே என்று நினைப்பது. இவற்றின் தொடர்ச்சியாகவோ என்னவோ ‘ஆட்டோ சஜஷன்’ என்று ஒரு முறையைக் கண்டுபிடித்தார்கள்.

நமக்கு நாமே சொல்லிக் கொள்வது. உன்னால் முடியும், செய், செய் என்பது போல, இனி நான் இந்தத்தவறைச் செய்ய மாட்டேன், செய்ய மாட்டேன் என்பது போல, திரும்பத் திரும்பச் சொல்ல, மனம் உள்வாங்கி, புரோகிராமில் சேர்த்து, உடல் அதை நிறைவேற்றத் தேவையானவற்றைச் செய்கிறது.
நம் எண்ணங்களே நம் செயல்கள் ஆவது இப்படித்தான்.
(பக். 59).

காத்திருக்க முடியாமல் உடனே செயல்படுவதற்கு இம்பல்ஸிவ் (Impulsive) குணம் என்பார்கள்.நினைத்ததும் பேசி விடுவது. நினைத்ததும் செய்து விடுவது. நிதானம் குறைவு. காத்திருக்கப் பொறுமை இல்லாதவர்களுக்கு எதிலும் கவனக் குவிப்பு இருக்காது. காரணம் அவர்கள் உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

அதனால் மூலையில் அதிக இடம் உணர்வுகளுக்கே போய்விடுகிறது. அப்படி ப் பெரும்பாலான இடம் உணர்வுகள் சம்பந்தப்பட்டதற்கு போய்விட, வேலை செய்வதற்கான நினைவுகளுக்கான இடம் தானாகவே குறைந்தது விடுகிறது.
(பக்.77).

எமோஷனல் இன்டெலிஜென்ஸ் 2.0:  பொறாமை வந்து விட்டால் யார் என்று பார்க்க மாட்டார்கள். என்ன செய்கிறோம் என்று தெரியாது. கெடுப்பார்கள். கோபத்தினால் ஏற்படும் தீமைகள் தெரிந்ததுதான். பொறாமையினாலுமா ஒருவருக்கு தீமைகள் வரும் என்று சிலருக்கு சந்தேகம் வரலாம்.

பொறாமை அடிப்படையான மனித உணர்களில் ஒன்று . அவர்களிடம் இருப்பது தெரியாமலே, அதை உணராமலே அதனால் ஆட்டி வைக்கப்படுகிறவர்கள் ஏராளம். போட்டி வேறு பொறாமை வேறு. போட்டியினால் நன்மை உண்டு . பொறாமையினால் அல்ல(பக். 100).

சோம வள்ளியப்பன், தொழில் முனைவோர்களுக்கு, பொருளாதாரத்தில் உயர வேண்டும் என்று நினைப்பவர் களுக்கு, போட்டி நிறைந்த உலகில் வெற்றியாளராக வர வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்களுக்கு, நல் வழிகாட்டுதல் களையும், ஆலோசனைகளையும் வழங்கக் கூடிய நூல்களைத் தருவதில் வல்லவர்.

எமோஷனல் இன்டலிஜென்ஸ் ” தொடர்பான இந்த இரண்டு நூல்களும், உணர்வு களைக் கட்டுப்படுத்தி, ஒழுங்குபடுத்தி நெறிபடுத்தி வாழ்வில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளைச் சொல்லும் நூல்களாகும். எமோஷனல் இன்டெலி ஜென்ஸ் என்பது உணர்வுகளைத் திறமையாகக் கையாள்வது என்பதாகும்.

வெற்றியாளர்களாகவும்திறமையாளர்களாகவும் இருந்தாலும், உணர்வுகளைத் திறமையாகக் கையாளவில்லை என்றால் தோல்விகளையும், அவமானங்களையும் சந்திக்க வேண்டி யிருக்கும் என்பதை நூல் முழுவதும், உலகக் குத்துச்சண்டை வீரர் மைக்டைசன் , இவான்டர்ஹோலிபீல்டின் காதைக் கடித்தது போன்ற பல உதாரணங்களைச் சொல்லி, அதை நெறிப்படுத்துவதற்கான வழிமுறைகளையும் விளக்கியிருக் கிறார். எல்லோருக்குமான நூல்.வெளியீடு -கிழக்கு பதிப்பகம்- விலை-ரூ.135, ரூ.250.

#சா.விஸ்வநாதன்- வாசகர்பேரவை- புதுக்கோட்டை#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top