சுவாமி விவேகானந்தரின் குரு ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம் சரின் (1836 பிப்.18- 1886 ஆகஸ்ட் 16) உதயதினம்(பிப்.18).
ஸ்ரீராமகிஷ்ணர் தன்னைப் பற்றி எதுவும் எழுதவில்லை. அவரைப் பற்றி மற்றவர்கள் எழுத அகத்தூண்டுதலாய் இருந்தார். பள்ளிக்கே செல்லாத அவர் பல்கலைக் கழக பேராசிரியர்களுக்கு இணையான அறிவைப் பெற்றிருந்தார். நூல்கள் கற்றுத்தர முடியாத பலவற்றை அவர் கற்றுத்தந்தார்.
மேக்ஸ் முல்லர் அவரை ‘உயர்ந்த ஆத்மா,’ மட்டுமல்ல; ‘உண்மையான மகாத்மா’ என்றும் ‘நற்சிந்தனையாளர்’ என்றும் கூறுகிறார். டால்ஸ்டாய் இராமகிருஷ்ணரை ‘மிக முக்கியமான துறவி, அவருடைய போதனைகள் மகத்தானவை என்கிறார்.
கிருஸ்டோபர் ஐசக் வுட் ‘உலகில் குறிப்பிடத்தக்கவர்’ என்றும், பிரெஞ்சு தத்துவஞானி ரோமைன் ரோலன்ட், ‘இசை மேதை யான அவரை ‘இந்தியாவின் சிம்பொனி ‘ என்றும் கூறுகின் றனர்.
இராமகிருஷ்ணர் குறித்த இசைப் பாடல்கள், கவிதைகள், நாடகங்கள், ஆய்வு நூல்கள், பல பாகங்களிலான வரலாறுகள், தத்துவ நூல்கள், போதனைப் புத்தகங்கள் எனத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. அவரது ‘அமுதமொழிகள்’ உலகின் முக்கிய மொழிகளில் மொழியாக்கம் செய்யப் பட்டுள்ளது.
சாகித்ய அகாதெமி , இந்திய இலக்கிய சிற்பிகள் வரிசையில் வெளியிட்டுள்ள “இராமகிருஷ்ண பரமஹம்சர் ” நூல்அவரைப் பற்றி முழுமையாக அறிய உதவும் சிறிய நூல்.
இராமகிருஷ்ணரின் வாழ்க்கை வரலாறு தொடங்கி அவரின் போதனைகள், நரேனுக்கும் அவருக்குமான உறவு வரை சித்திரமாக வரையப்பட்டுள்ளது.
இந்நூலில் இராமகிருஷ்ணரின் நீதிக்கதைகளும் பின்னி ணைப்பில் உள்ளது. வாழ்வை செம்மையாக்க, மன அமைதி பெற இராமகிருஷ்ணரை வாசிப்போம்.இந்திய இலக்கிய சிற்பிகள்.சாகித்ய அகாதெமி-ரூ.50.
# சா.விஸ்வநாதன்-வாசகர் பேரவை- புதுக்கோட்டை #