Close
நவம்பர் 21, 2024 2:04 மணி

புத்தகம் அறிவோம்.. இந்தியக்கல்வி போராளிகள்..

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்- இந்திய கல்விப் போராளிகள்

சாவித்ரி பாய் பூலே…

” ஒரு ஆசிரியரின் வெற்றி என்பது என்ன? இந்தியாவின் முதல் பெண் ஆசிரியையான சாவித்ரிபாய் பூலே வாழ்க்கை நமக்கு உணர்த்தும் செய்தி என்ன? நீங்கள் ஆசிரியர் என்றால் உங்களிடம் கல்வி கற்ற மாணவர்களில் எத்தனை பேர் மருத்துவர், எத்தனை பேர் பொறியியலாளர். ஐ.ஏ.எஸ். என்பதல்ல வெற்றி. நீங்கள் சிறந்த ஆசிரியர் என்றால் உங்கள் மாணவர்களில் எத்தனை பேர் உங்களைப் பார்த்து ஆசிரியர் ஆக முடிவு செய்தார்கள் என்பதே வெற்றி. சாவித்ரிபாய் பூலேயிடம் கல்வி கற்ற மாணவிகளில் 417 பேர் அடுத்த தலைமுறை ஆசிரியர்களாயினர் என்று காவியா பூலே கவிதை நூலுக்கான முன்னுரையில் அவரது மாணவியும் (பிற்கால ) தலைமை ஆசிரியையுமானரத்னாசகாய் எழுதுகிறார்.(பக் 35).

“ஆசிரியர் வாழ்க்கையையே வாழ்வாக்கிக் கொண்ட அந்தப் போராளி பிளேக் பாதித்த – மருத்துவ மனையால் கைவிடப்பட்ட தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இருநூறு குழந்தைகளைத் தனது கல்வியகத்தில் சேர்த்து அவர்களுக்கு மருத்துவத் தாதியாகி ஒரு ஆசிரியர் என்ன செய்ய வேண்டுமோ அந்தச் சமூகக்கடமையை ஆற்றியபடியே அதே நோய்த்தாக்குதலுக்கு ஆளாகி இறந்து போனார். ஆஸ்திரியாவில் 20 யூதக் குழந்தைகளோடு ஹிட்லரின் மரண முகாமில் தானும் ஒருவராய் மடிந்த ஆசிரியர் ஜோஹான் கோர் சாக் பற்றிய காவியங்கள் உண்டு. நம் முதல் ஆசிரியை சாவித்ரிபாய் பூலேவின் வாழ்வும் அந்த மகாகாவியங்களில் ஒன்றே.(பக். 35).

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்ரிபாய் பூலே (03.03.1831 – 10.03.1897) யின் நினைவு தினம் இன்று. மகாராஷ்டிராவில் மிகவும் பிறப்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்து, 12 வயதில் திருமணமாகி, கல்வி கற்றதற்காக தன் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு, வேற்றூர் சென்று, கணவரின் உதவியால் படித்து, பெண்களுக்காக பள்ளி தொடங்கி, பயிற்றுவித்து, அதற்காக பல்வேறு துயரங்களையும், அவமானங்களையும் எதிர்கொண்டு, வாழ்நாள் முழுதுவதையும் பெண்களுக்காக அர்ப்பணித்துக் கொண்ட சாவித்ரிபாய் பூலே உட்பட 23 கல்விப் போராளிகளைப் பற்றிய கட்டுரைகள் “இந்தியக் கல்விப் போராளிகள் நூலில் உள்ளது. வெளியீடு- பாரதி புத்தகாலயம்-9444960935. விலை- ரூ.100/.

# சா. விஸ்வநாதன்- வாசகர் பேரவை- புதுக்கோட்டை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top