Close
டிசம்பர் 3, 2024 5:17 மணி

புத்தகம் அறிவோம்.. மலையாள மனோரமா ” வெளியிடக்கூடிய குழந்தைகளுக்கான ஆங்கில மாத இதழ் “Tell Me Why”

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்

கேரளாவின் பிரபல நாளிதழ் “மலையாள மனோரமா ” வெளியிடக்கூடிய குழந்தைகளுக்கான ஆங்கில மாத இதழ் “Tell Me Why”.

தமிழ் வழியில் பயிலும் மாணவர்களும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில், எளிய ஆங்கிலத்தில் வடிவமைக்கப்பட்டு வெளிவருகிறது.
குழந்தைகளுக்கானது என்றாலும் பள்ளி , கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், போட்டித் தேர்வு எழுதுகிறவர்கள் என்று அனைவருக்கும் பயன்படக்கூடியது.

வரலாறு, அரசியல், அறிவியல், தேசங்கள், பறவைகள், விலங்குகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், விஞ்ஞானிகள், தலைவர்கள், கோட்பாடுகள் – அரசியல், அறிவியல், சமுகவியல், பொருளியல், மானுடவியல் – ,உலக அதிசயங்கள் என்று குழந்தைகள் அறிந்து கொள்ள வேண்டிய அத்தனை விஷயங்கள் பற்றி, ஒவ்வொரு மாதமும், ஒரு தலைப்பில், அந்தத் தலைப்பு தொடர்பான 100 அடிப்படைத் தகவல்களை (100 + Facts) திரட்டித் தருகிறார்கள் இந்த மாத இதழில்.

ஒவ்வொறு பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளின் பிறந்தநாளிற்கு ஆடைகள் வாங்கிக் கொடுப்பது போல், அறிவுக்கு வித்திடும் இந்த இதழுக்கு ஆண்டுச் சந்தா செலுத்தி பரிசளிக்கலாம். ஆசியர்கள் புதிய தகவல்களை மாணவர்களுக்கு சொல்ல வாசிக்கலாம். போட்டித் தேர்வாளர்கள் போ.தேர்வுக் கேள்விகளுக்கு பதிலளிக்க படிக்கலாம்

தற்போது பிரதி விலை ரூ.45-  6 மாதம், 1 வருடம் 2 வருடம், 3 வருடம் என்று சந்தா செலுத்துபவர்களுக்கு சலுகையும் இருக்கிறது. சந்தா செலுத்தி னால் வீடு தேடி வந்து விடும்.

Email: subscription @mmp.in, childrens division @mmp.in, Chennai 044-43181405.

#சா. விஸ்வநாதன்-வாசகர் பேரவை- புதுக்கோட்டை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top