அவன் கண்களால் பாருங்கள்! ” பிளஸ் 2 படிக்கும் போது கணேஷ் இரண்டு மாதங்களாகப் பள்ளிக்குச் செல்லவில்லை. சராசரியாகப் படிக்கும் மாணவனான அவனுக்கு நண்பர்களும் குறைவு.
கணேஷ் என்ன ஆனான் என்பது பற்றி யாரும் கவலைப்படவில்லை. படிப்பில் ஆர்வமில்லாமல் ஊர்சுற்றுவதாக மற்ற மாணவர்கள் பேசிக்கொண்டார்கள்.
உடல் நலமில்லாத தன் தந்தையின் சிகிச்சைக்காக அவன் மருத்துவ மனைக்கும் வீட்டிற்கும் அலைந்து கொண்டிருந்தான். தேர்வு நேரத்தில் பள்ளிக்கு வந்த கணேஷ் தட்டுத்தடுமாறி தேர்வுகளை எழுதி பாஸ் ஆனான். “உனக்கெல்லாம் காலேஷ் சீட் கிடைக்காது. நீ படிக்கிறதே வேஸ்ட்” என மற்றவர்கள் அவனைக் கிண்டல் செய்தார்கள்.
வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் பேக்கரியில் கேக்குகள், பிஸ்கட்டுகள் செய்வதை கணேஷ் ஆர்வத்துடன் கவனிப்பான். இது இவன் தந்தைக்கு தெரியும். “நீ ஏன் அதைக் கற்றுக் கொண்டு பேக்கரி தொழில் செய்யக் கூடாது? என்று அவனிடம் கேட்டார்.
கணேஷ் அதையே கற்றுக் கொண்டு தொழிலாக ஏற்றான். இரண்டே ஆண்டுகளில் சொந்தமாக பேக்கரி திறந்தான். ஆர்வமும் ரசனையுமாகச் செய்ததால் நல்ல ருசியில் அவனால் கொடுக்க முடிந்தது. அவன், பேக்கரி புகழ் பெறத் தொடங்கியது.
நகரில் அடுத்தடுத்து கடைகள் திறந்தான். மற்றவர்கள் படித்து முடித்து வேலைக்கு போவதற்கு முன்பே அவன் தொழிலில் வேரூன்றிவிட்டான். சில ஆண்டுகளில் அவன் படித்த வகுப்பில் படித்தவர்களிலேயே பெரிய பணக்காரன் என்ற நிலையை எட்டினான். பள்ளி நண்பர்கள் தேடி வந்து பாராட்டினர். ‘ கணேஷ் எங்கள் நண்பன்’ என்று பெருமையுடன் சொல்லிக் கொண்டார்கள்.
தன் மகனின் எதிர்காலம் பற்றி ஒரு தந்தை மாற்றி யோசித்தனால் இது சாத்தியமாயிற்று (இந்தக் கதையில் பெரும் பகுதி புதுக்கோட்டை “பேக்கரி மகராஜ் ” நிறுவனர் மறைந்த சீனு. சின்னப்பாவிற்கு பொருந்தும்) (பக்.25).
“வெண்மை எண்ணங்கள் ” சிறப்பிதழ் புத்தகம், வேட்டிக்கு புகழ் பெற்ற “ராம்ராஜ் காட்டன் “நிறுவனத்தால் வெளியிடப்படுகிறது.
இது மாதந்தோறும் வரும் ஒரு வாழ்வியல் நூல். ராம்ராஜ் காட்டன் நிறுவனம் ஒரு நெறியோடு தொழில் செய்வதோடு சமூக மேம்பாட்டிற் காகவும் பல பணிகளைச் செய்து வருகிறது.
அதில் ஒன்று இந்த நூல் வெளியீடு. சமூகத்தில் இருக்கும் அனைத்து தரப்பினருக்குமான நூல். ஒரு தலைப்பை எடுத்துக் கொண்டு, அது தொடர்பான, அரிய தகவல்களைத் திரட்டி, எளிமையாக புரிந்து செயல்படுத்தும் வகையில் தருவது தான் இதன் சிறப்பு. இன்னொரு சிறப்பு, ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன், “மதிப்பிக்குரியவர் களுக்கு …. ” என்று எழுதும் இரண்டுபக்க தலையங்க கட்டுரை – ஒரு அனுபவச் சுரங்கம்.
முன்பு வெளிவந்த நூல்களின் தலைப்புகள் சில..
வாழ்க்கைக் கல்வி,
நன்னெறி சிறப்பிதழ்
ஆர்வம்…
வெற்றியாளர்…
மேன்மக்கள் …
அன்பாசிரியர் …
விடுதலை…
ஈடுபாடு …
தந்தையர் தின சிறப்பிதழ்
பெருமை …
நேரம்…
சிறுதானியம் …
இந்தத்தலைப்புகளைப் பார்த்தாலே நூலின் உள்ளடக்கம் புரியும்.
தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கிக் கொண்டிருந்தவர்கள் பலரின் வேண்டுகோளுக்கு இணங்க விற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். தற்போது இதன் விலை 18 ரூபாய். ஆனால் ஆண்டுச் சந்தா செலுத்தினால், மாணவ மாணவியருக்கு சலுகையில்
ஒரு ஆண்டு ரூ. 125,இரண்டு ஆண்டுக்கு ரூ. 250 க்கும் அதே போல 60 வயதுக்கு மேற்பட்ட சீனியர் சிட்டிசனுக்கும் மேற்கண்ட சலுகையில் வீட்டிற்கே அனுப்பப்படுகிறது. மகளிர் தினத்தை ஓட்டி பெண்களுக்கும் மேற்கண்ட சலுகை அறிவிக்கப்பட்டிருக்கிறது.சந்தா செலுத்த… விபரம் இணைப்பில் உள்ளது.
பிறந்தநாள் பரிசாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளும், தாத்தாக்கள் பேரக்குழந்தைகளுக்கும் சந்தா செலுத்தி இதை வாங்கிக் கொடுங்கள். மிகச்சிறந்த அன்பளிப்பாக இருக்கும்.ஆசிரியர்கள் நல்ல மாணவர்களை உருவாக்க இந்நூல் வாசிப்பு மிகவும் பயன்படும்.
#சா. விஸ்வநாதன்- வாசகர் பேரவை- புதுக்கோட்டை #