இந்தியாவின் தேசிய பறவை – மயில்.
மாநிலப் பறவைகள்:
1.ஆந்திர பிரதேசம் – ரோஜா வளையக் கிளி (Rose ringed parakeet).
2.அருணாசல பிரதேசம் – மலை இருவாட்சி (Great Hornbill.)
3.அசாம் -வெள்ளை இறக்கைகள் கொண்ட வாத்து (White ringed wood Duck).
4.பீகார் – வீட்டுக் குருவி ( House Sparrow) – ஊர்க் குருவி – சிட்டுக் குருவி.
5.சத்தீஸ்கர் – பஸ்தர் மலை மைனா (Bastar hill Myna).
6.கோவா – சுடர் தொண்டை புல்புல் (Flame throated bul bul).
7.குஜராத் – கிரேட்டர் ஃபிளமிங்கோ (Greater Flamingo).
8.. ஹரியானா – கருப்பு ஃபிராங்கோலின் (Black Francolin).
9. இமாசலப் பிரதேசம் – மேற்கத்திய டிராகோபன் (Western Tragopan ).
10. ஜார்கண்ட் – ஆசியக் குயில் (Asian Koel).
11. கர்நாடகா – பனங்காடை (Indian Roller ) நீலகண்டா கன்னடத்தில்.
12. கேரளா – பெரிய இந்திய இருவாட்சி (Great Indian Hornbill ).
13. மத்திய பிரதேசம் – இந்திய சொர்க்க ஈப்பிடிப்பான்/ ஆசிய சொர்க்க ஈப்பிடிப்பான் (Indian paradise flycatcher/Asian paradise flycatcher).
14. மகராஷ்டிரா – மஞ்சள் கால் பச்சைப் புறா (yellow footed pigeon).
15. மணிப்பூர் / மிஸஸ் ஹியூம்ஸ் பெசண்ட் (Mrs Hume’s pheasant).
16. மேகாலயா – ஹில் மைனா (Hill Myna).
17. மிசோரம் – மிஸஸ் ஹியூம்ஸ் பெசண்ட் (Mrs Hume’s pheasant ).
18. நாகாலாந்து – பிளைத்தின் டிராகோபன் (Blythe ‘s Tragopan ).
19. ஓடிசா – இந்தியன் ரோலர்.
20. பஞ்சாப் – வடக்கு கோஷாக் (Northern goshawk ).
21. ராஜஸ்தான் – கிரேட் இந்தியன் பஸ்டர்ட் (Great Indian Bustard ) – உள்ளூர் மக்களால் கோடவன் – கானமயில் – தமிழில்.
22. சிக்கிம்- இரத்த பெசண்ட்(Blood pheasant).
23. தமிழ்நாடு – மரகதப் புறா (Emerald dove).
24. தெலுங்கானா – பால பிட்டா (Palapitta ).
25. திரிபுரா – பச்சை இம்பீரியல் புறா (Green imperial pigeon) தமிழில் பெரிய பச்சைப் புறா.
26. உத்தரப் பிரதேசம் – சாரஸ் கிரேன் (Sarus crane ) – பெருங் கொக்கு – உலகின் உயரமான பறக்கும் பறவை இது.
27. உத்தரகாண்ட் – ஹிமாலயன் மோனல் (Himalayan Monal), இம்பெயன் மோனல்(Impeyan monal) மற்றும் இம்பெயன் பெசண்ட்.
28. மேற்கு வங்காளம் – வெண் மார்பு மீன் கொத்தி(White breasted kingfisher) வெள்ளைத் தொண்டை மீன்கொத்தி.
யூனியன் பிரதேசம்…
29. அந்தமான் நிக்கோபார் – அந்தமான் மரப்புறா (Andaman wood pigeon).
30. சண்டிகர் – இந்திய சாம்பல் இருவாச்சி (Indian grey hornbill ).
31. தில்லி – சிட்டுக் குருவி (House sparrow).
32. ஜம்மு காஷ்மீர் – கலீஜ் பெசண்ட் (Kalij pheasant ) – காட்டுச் சேவல்.
33. லடாக் – கருப்புக் கழுத்து கொக்கை (Black-necked Crane).
34. லட்சத்தீவு – சூட்டி டெர்ன் (Scooty tern).
35. பாண்டிச்சேரி – ஆசியக் குயில் (Asian koel ).
சமீபத்தில் போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களை வைத்து ஒரு வினாடி வினாப் போட்டி நடத்தினார்கள். அது ஆறு குழுக்களைக் கொண்டது. முதலில் போட்டியை நடத்தியவர், ஒரு தாளைக் கொடுத்து இந்திய மாநிலங்களையும் அதன் தலைநகரங்களையும் மேலே உள்ளது போல் வரிசையாக எழுதுங்கள் என்று கேட்டார். ஒரே ஒரு குழுவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே சரியாக எழுதினார்கள்.
ஏற்காடு இளங்கோ எழுதியிருக்கும் “இந்திய மாநிலப் பறவைகள் ” போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கு மிகவும் பயனுள்ள நூல்.
ஆசிரியர்,ஒவ்வொரு மாநிலமும் உருவாகிய ஆண்டு, மாநிலப்பறவை தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்ட ஆண்டு, அப்பறவ என்னென்ன பெயர்களில் அழைக்கப்படுகிறது, அதன் நிறம், உடலமைப்பு , நடத்தை, இனப்பெருக்கம், வாழ்விடம், உணவு என்று அந்தப் பறவையைப் பற்றிய முழுமையான தகவல்களை வாசகர்களுக்கு திரட்டித்தந்திருக்கிறார். மொத்தம் 35 கட்டுரைகள் இந்நூலில் உள்ளது.இது ஒரு நல்ல பொது அறிவு நூல்.
அறிவியல் வெளியீடு,245, அவ்வை சண்முகம் சாலை,கோபாலபுரம், சென்னை. 86. 9488054683. ரூ. 150.
#சா.விஸ்வநாதன், வாசகர்பேரவை-புதுக்கோட்டை#