Close
அக்டோபர் 3, 2024 9:15 காலை

புத்தகம் அறிவோம்… சிந்துவெளி பண்பாட்டின் திராவிட அடித்தளம்..

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்- சிந்துவெளி பண்பாட்டின் திராவிட அடித்தளம்

உலகின் ஒப்பற்ற சிந்து வெளி நாகரிகத்தை கண்டறிந்து உலகிற்கு அறிவித்த (20.09.1924)சர் ஜான் மார்ஷலுக்கு நல் வணக்கங்கள். இதற்கு துணைநின்ற தயா ராம் சாக்னிஆர்.டி. பானர்சி ஆகியோருக்கும் நம் வணக்கங்கள்.

சிந்து வெளி ஆய்வுகளை மேற்கொண்ட “இந்திய தொல்லியல் கழகத்தை ” (Archeological Survey of India) உருவாக்கிய கர்சான் பிரபுவுக்கும் நம் நன்றிகள்.

தமிழகத்தில் சிந்து வெளிநாகரிகம் தொடர்பாக விரிவான ஆய்வுகளைச் செய்து புதிய கருத்துகளை விதைத்துச் சென்றிருக்கும் ஐராவதம் மாகாதேவன் அவர்களுக்கும்,

தொடர்ந்து தமிழக மெங்கும் சென்று, சிந்து வெளி நாகரிகம் திராவிட நாகரிகத்தின் உட்கூறுகளை கொண்டது என்ற கருத்தையும், அது தொடர்பான புதிய செய்திகளையும் வழங்கிக்  கொண்டிருக்கும் ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள், வணக்கங்கள்.

இந்த நாளை வரலாற்று மாணவர்கள், ஆசிரியர்கள் யாவரும் தீபாவளி போல் கொண்டாட வேண்டும்.ஆர்.பாலகிருஷ்ணன், பெருந்தலைவர் காமராஜரின் அறிவுரையை ஏற்று, தமிழ் படித்து,தமிழில் தேர்வு எழுதி வெற்றி பெற்ற முதல் ஐஏஎஸ் . ஒரிசா மாநில தலைமைச்செயலாளராகப் பணியாற்றியவர். ஐராவதம் போன்றே இவரும் மிகச்சிறந்த வரலாற்று ஆய்வாளர். சிந்து வெளிநாகரிகம் திராவிட பண்பாட்டை அடித்தளமாகக் கொண்டது என்பது பாலகிருஷ்ணனின் முடிவு. அதை விரிவாகப் பேசுகிறது “சிந்து வெளிப் பண்பாட்டின் திராவிடஅடித்தளம் ” நூல். இந்த நூல் புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் சிறந்த ஆய்வு நூலுக்கான விருதைப் பெற்றது.

“நூலாசிரியர் திராவிட மொழியியலையும், சிந்து வெளிப் புவியியலையும் பிணைத்து ஒரு புது கருதுகோளைப் படைத்துள்ளார். அதன் மூலம் சிந்து நகர மக்கள் திராவிட மொழிகளையே பேசியிருக்க வேண்டும் என்ற வரலாற்று உண்மையை அறிவியல் அடிப்படையில் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் மீண்டும் நிறுவியுள்ளார்”என்கிறார், இந்த நூலுக்கு முன்னுரை தந்த  ஐராவதம் மகாதேவன்.

மேலும் “தமிழ் ஆய்வாளர்களும், வரலாற்று ஆய்வாளர்களும் கவனமாக படித்துப் பயன் பெற வேண்டும் ” என்ற வேண்டுகோளையும் வைக்கிறார்.வெளியீடு:பாரதி புத்தகாலயம், சென்னை.044 – 24332424. விலை-ரூ.150.

# சா. விஸ்வநாதன்- வாசகர் பேரவை- புதுக்கோட்டை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top