“போராளி” என்றொரு தமிழ் சினிமா.சசிகுமார் கதாநாய கனாக நடித்தது. கதாநாயகன் பள்ளியில் படிக்கும் போது நிறைய கேள்விகள் கேட்பான்.சந்திரனில் காலடி வைத்தது நீல் ஆம்ஸ்ட்ராங். அவர் முதலில் வைத்தது வலது காலா இடதுகாலா என்று கேட்கிறான். ஆசிரியர்களுக்குத் தெரியாது.
தினந்தோறும் இவன் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தேடுவதே ஆசிரியர்களுக்கு பெரும்பாடாய் போய்விடும். கேள்விகளுக்கு பதில் சொல்வதற்குப் பதிலாக அவனை பள்ளியிலிருந்தே நீக்கிவிடுவார்கள். சொல்லும் காரணம் இவன் அம்மா மனநலம் பாதிக்கப்பட்டவர். அது இவனுக்கும் இருக்கிறது. அது மற்ற மாணவர்களையும் பாதிக்கும் என்பதுதான்.
ஆயிஷா கதையில் வரும் ஆயிஷாவும் அப்படியே. பெரிய புத்திசாலி. எதையும் உடன் ஏற்றுக்கொள்ளமாட்டாள். அறிவியல்பூர்வமாக சிந்திப்பவள். இதற்காக ஆசிரியை களிடம் தினந்தோறும் அடிவாங்குபவள்.
இவளின் அறிவையும், திறமையையும் புரிந்துகொண்டவர் ஒரு ஆசிரியை. ஆனால் அவராலும் அடியிலிருந்து காப்பாற்ற இயலவில்லை. இறுதியில், அடியிலிருந்து தப்பிக்க அறுவைச் சிகிச்சைக்கு, மரத்துப்போக பயன்படுத்தப்படும் நைட்ரஸ் ஆக்சைடை ஊசி வழி செலுத்தி வலியிலிருந்து தப்பிக்க முயல்வாள் இறுதியில் இறந்து போவாள்.
24 பக்கங்களைக் கொண்ட இந்த சிறிய புத்தகத்தை எழுதிய இரா.நடராஜன், இந்தப் புத்தகம் வெளிவந்த பின்னர் “ஆயிஷா இரா.நடராஜன்” அழைக்கப்படலானார். ஏராளமான அறிவியல் நால்களை எழுதியவர்.
ஆயிஷா வில் ஒரு வார்த்தையைக் கூட வாசிக்காமல் விடமுடியாது. இந்தக் கதையில் வரும் ஆசிரியைகள் போல இன்றும் நிறைய பேர் கூடுதலான வாசிப்பிற்கு தங்களை ஈடுபடத்திக்கொள்ளாமல்தான் இருக்கிறார்கள்.
மாணவர்களின் திறமையைக் கண்டறிந்து ஊக்குவிற்பவர் களும் குறைவு. “கல்வி என்பது ஒவ்வொருவரிடம் உள்ள ஆற்றலை வெளிக்கொணர வேண்டுமென்பார்விவேகானந்தர். அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க விரும்பும் ஒவ்வொரு ஆசிரியரும்ஆயிஷாவை வாசிக்க வேண்டும்.
Books for children வெளியீடு.8778073949.
—பேராசிரியர் விஸ்வநாதன், வாசகர் பேரவை.–