ஆசிரியர் மனசு திட்டத்தின் கீழ் வந்த கோரிக்கையை உடனடியாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிறைவேற்றியுள்ளார்.
தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நலன் சார்ந்து பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து சுமார் 72 இலட்சம் மாணவ / மாணவிகள் பயின்று வருகின்றனர்.
ஆசிரியர்களின் பணிச்சூழல் இணக்கமான முறையில் இருப்பதை உறுதி செய்யவும், தேவையற்ற நிர்வாக பணிச்சுமையை குறைக்கவும், தங்களது பணிநேரத்தை மாணவர்களின் கற்றல் கற்பித்தல் பணிக்காக முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளும்வகையில் 2021-2022 -ஆம் கல்வியாண் டிற்கான பள்ளிக்கல்வித் துறையின் மான்ய கோரிக்கை விவாதத்தின் போது பள்ளிக்கல்வி துறை அமைச்சர் பள்ளி பதிவேடுகளை கணினி மயமாக்கப்படும் மற்றும் தேவையற்ற பதிவேடுகள் நீக்கம் செய்யப்படும் என்று அறிவித்தார்.
அறிவிப்பினை செயல் படுத்தும் வகையில் பார்வை (1)இல் காணும் அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. அரசானை யின்படி, பின்வரும் 11 பதிவேடுகளை நீக்கம் செய்திடவும் 81 பதிவேடு களை கல்வி தகவல் மேலாண்மை முறைமை வாயிலாக கணினியில் (இணையவழியில்) மட்டும் பராமரித்திடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வழக்கொழிந்த பதிவேடுகள்
1 Treasury Register
2 Salary Deduction Register
3 Supplementary Cash Register 4. Permanent Balance Register
5 Pending Special Fees Register
6. Penalty: Fine Register
7. Un-Disburse Payment(UDP) Register
& Bill Register
9. Contingency Register
10. Retails Cost Register Individual Aid Register
பார்வை(3)இல் காணும் செயல்முறையின்படி, எண்ணும் எழுத்தும் திட்டத்தை செயல்படுத்தும் 1, 2 மற்றும் 3 -ஆம் வகுப்பு ஆசிரியர்கள் பாடக்குறிப்பேடு (Notes of Lesson) மட்டும் பராமரித்தல் போதுமானது.
இதைத்தவிர வேறு எந்தவொரு பதிவேட்டையும் பராமரிக்க தேவை இல்லை என தெளிவாக அறிவுறுத்தப்படுகிறது. இந்நிலையில் 4 முதல் 12 -ஆம் வகுப்பு பாடஆசிரியர்களும் பாடக்குறிப்பேடு (Notes of Lesson) மட்டும் பராமரித்தல் போதுமானது. பாடத்திட்டம் (Lesson Plan), பணி செய்பதிவேடு (Work done Register) ஆகிய பதிவேடுகளை பராமரிக்க தேவையில்லை என அனைத்து தலைமையாசிரியர்கள் / ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து கல்வியாளர்கள் சங்கமம் நிறுவனர் சதிஷ்குமார் கூறியதாவது: ஆசிரியர் மனசு திட்டத்தின் கீழ் வந்த கோரிக்கையினை அடுத்து மரியாதைக்குரிய பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் உடனடி உத்தரவுக்கிணங்க ஆசிரியர்களுக்கு கற்பித்தல் சுதந்திரம் வழங்கி பள்ளிக்கல்வி ஆணையர் அரசாணை வெளியிட்டுள்ளதை ஆசிரியர் சமூகம் மன மகிழ்வுடன் வாழ்த்தி வரவேற்பதாக தெரிவித்தார்