Close
ஏப்ரல் 5, 2025 11:42 மணி

சிறைத்துறை ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்: சட்டம், சிறைத்துறை அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை

சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி

சிறைத் துறை பணியாளர்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்படும் என்றார் மாநில சட்டம் மற்றும் சிறைத் துறை அமைச்சர் எஸ். ரகுபதி.

புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பு தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை விரைவில் சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்படும்.

தமிழக அரசு விழிப்போடு இருந்ததால்தான் தமிழகத்தில் எங்கெல்லாம் கஞ்சா புழக்கத்தில் இருந்ததோ அவற்றை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடலூரில் சிறை அலுவலர் வீடு தாக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் மிகுந்த அச்சுறுத்தலோடு பணியாற்றிக் கொண்டு இருப்பவர்கள் சிறைத்துறையில் இருக்கக்கூடிய சிறைக் காவலர்கள்தான்.

இது வெளி உலகுக்குத் தெரியாதுபல வழக்குகளில் குற்றவாளிகள் என்று குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள்தான் சிறையில் அடைக்கப்படுகிறார் கள்அவர்கள் குற்றம் புரிவதற்கு தயங்குவது கிடையாது.

அவர்களோடு இருக்கக்கூடிய சூழ்நிலையில் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு ஆளாகிக் கொண்டுதான் சிறையில் பணியாற்றுகிறார்கள்அவர்களுக்குப் போதுமான பாதுகாப்பு கொடுப்பதற்கும்அவர்களது குடும்பத்தைக் காப்பதற்கும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.

சிறைப் பணியாளர்களிடம் பயங்கரமான செயல்களில் ஈடுபடக் கூடிய கைதிகளை கண்காணித்துஅவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது  என்றார் ரகுபதி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top