Close
ஏப்ரல் 6, 2025 12:21 காலை

புதுக்கோட்டையில் செப் 29, 30 -ல் கல்லூரி மாணவர்களுக்கு கல்வெட்டு படித்தல் பயிற்சி

புதுக்கோட்டை

புதுக்கோட்டை.யில் கல்வெட்டு படித்தல் பயிற்சி செப் 29 ல் தொடங்குகிறது

புதுக்கோட்டை மாவட்டத்தில் உலக சுற்றுலா தின விழா-2022 வை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் மாவட்ட ஆட்சியரின் அறிவுரைப்படி 27.09.2022 முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது

அதன் ஒரு பகுதியாக 29. 9 .22 மற்றும் 30.9.2022 ஆகிய நாட்களில் பத்திரிகையாளர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிக ளுக்கு கல்வெட்டு படித்தல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்நிகழ்வு புதுக்கோட்டை முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் உள்ள தேர்வுக்கூட அரங்கில் காலை 10.30 முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற உள்ளது.

அழகப்பா பல்கலை கழகத்தின் இணைநிலை பேராசிரியர் எஸ் .இராசவேலு, புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனரும், புதுக்கோட்டை தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் ஒருங்கிணைப்பாளருமான ஆ.மணிகண்டன் ,மூத்த கல்வெட்டு ஆய்வாளரும் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தின் தலைவருமான கரு.ராசேந்திரன் , அருங்காட்சியக  முன்னாள் துணை இயக்குநர் முனைவர் ஜெ.ராஜா முகமது ஆகியோர் இரண்டு நாட்களுக்கு பயிற்சியளிக்கவுள்ளனர்.

பயிற்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். பத்திரிக்கையாளர்கள்,ஆசிரியர்கள், சுற்றுலா மற்றும் வரலாற்று துறை மாணவர்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பயன் பெறலாம் என  புதுக்கோட்டை மாவட்ட சுற்றுலா அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top