Close
நவம்பர் 22, 2024 11:57 காலை

திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் உயிரிழந்த பத்திரிகையாளர்கள் குடும்பத்தினர் கோரிக்கைமனு

திருச்சி

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்த பத்திரிகையாளர்களின் குடும்பத்தினர்

திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் பத்திரிகையாளர்கள்  குடும்பத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.

திருச்சி பத்திரிகையாளர்களுக்கு கடந்த 2008 -ஆம் ஆண்டு கொட்டப்பட்டு பகுதியில் 2400 சதுர அடி நிலம் மானிய விலையில் வழங்கப்பட்டது. திருச்சியில் பணியாற்றி வந்த  பத்திரிகையாளர்கள் 57 பேர் நிலத்தின் மதிப்பீட்டு தொகையான தலா  ரூ.92,769/- ஐ அரசு கருவூலத்தில் செலுத்தி பட்டா பெற்றனர்.

பின்னர் அந்த இடம் நீர்நிலை என்பதால் அதை ஒப்படைக்கு மாறும், அதற்கு இணையான இடம் வழங்கப்படும் என்றும் அப்போதைய கலெக்டர் ராசாமணி கூறினார். அவரது உறுதி மொழியின் அடிப்படையில் திருச்சி பத்திரிகையாளர்கள் சம்பந்தப்பட்ட இடத்தை ஒப்படைத்தனர். ஆனால் இன்று வரை மாற்று இடமோ அல்லது நிலத்தின் மதிப்பீட்டு தொகையோ பத்திரிகைாயாளர்களுக்கு வழங்கப்படவில்லை.

இதற்கிடையே பணம் கொடுத்து நிலம் வாங்கி மீண்டும் அரிடமே  ஒப்படைத்த பத்திரிகையாளர்களில் 8 பேர் காலமாகிவிட்டனர். அவர்களது குடும்பம் வறுமை நிலையில் உள்ளது. அவர்களுக்கு நிலத்தையோ அல்லது அதற்கான மதிப்பீட்டுதொகையோ ஒப்படைக்கப்பட்டால் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இது தொடர்பாக அவர்கள் பலமுறை அடுத்தடுத்து வந்த கலெக்டர்களிடம் மனு கொடுத்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை.வழக்கமாக பொதுமக்கள் பிரச்னைக்கு குரல் கொடுத்து அவர்களுக்கு ஒரு புதிய விடியலை தேடித் தருபவர்கள் பத்திரிகையாளர்கள்.

திருச்சி
திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்க வந்த பத்திரிகையாளர்களின் குடும்பத்தினர்

ஆனால் இன்று இறந்து போன பத்திரிகையாளர்கள் 8 பேரின் குடும்பத்தினரான. திருச்சி காஜப்பேட்டை,பாலக்கரை பகுதியை சேர்ந்த சுபா(மாலைமுரசு முன்னாள் புகைப்பட கலைஞர் தர்மராஜின் மனைவி),  மற்றும் விசாலாட்சி சமுத்திரராஜன், (தினமணி முன்னாள் நிருபர் சமுத்திரராஜனின் மனைவி),  சுப்புலட்சுமி மகாராஜன் (தினகரன், முன்னாள் போட்டோ கிராபர் மகாராஜனின் மனைவி),

இந்திராணி சந்திரசேகரன் (தினகரன் முன்னாள் போட்டோகிராபர் சந்திரசேகரனின் மனைவி), கார்த்திக்ராஜா, சித்தார்த்தன் ( தினபூமி, முன்னாள் நிருபர் சித்தார்த்தனின் மகன்), பொற்செல்வி ஜெயப்பிரகாசம் (தினகரன், முன்னாள் நிருபர் ஜெயப்பிரகாசத்தின் மனைவி). ஆகியோர் கண்ணீருடன் கோரிக்கை  மனுவை திருச்சி கலெக்டர் பிரதீப் குமாரிடம் அளித்தனர்.

அதில் கணவன் மற்றும் தந்தையை இழந்து வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும் எங்களையும், எங்கள் , குழந்தைகளின் நிலையையும் அரசு கருத்தில் கொண்டு மாற்று இடம் அல்லது ஒதுக்கப்பட்ட இடத்திற்கான மதிப்பு தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top