Close
செப்டம்பர் 20, 2024 2:37 காலை

இரும்பு தகடுகளைக் கையாள்வதில் சென்னை துறைமுகம் புதிய சாதனை

சென்னை

கப்பல் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட 14,993 மெட்ரிக் டன் இரும்பு தகடுகளை ஒரே நாளில் கையாண்டு சென்னை துறைமுகம் புதிய சாதனை

வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட 14,993 மெட்ரிக் டன் இரும்பு தகடுகளை ஒரே நாளில் கையாண்டு சென்னை துறைமுகம் புதிய சாதனையை எட்டியுள்ளது.

இதுகுறித்து சென்னை துறைமுகம் சார்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி தகடுகளை ஜன.31-ம் தேதி சென்னை துறைமுகத்திற்கு வந்திருந்த எம். வி. லக்கி சோர்ஸ் என்ற கப்பலிலிருந்து 14,993 மெட்ரிக் டன் இரும்பு தகடுகளை செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் இறக்குமதி செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இதற்கு முன்பு முன்பு மார்ச் 13,2022 எம்.வி. போனிக்ஸ் நேரேட் என்ற கப்பலிலிருந்து 13,879 மெட்ரிக் டன் இரும்பு தகடுகளைக் கையாண்டதுதான் சாதனை அளவாக இருந்து வந்தது.

துறைமுக தலைவர் பாராட்டு: இப்புதிய சாதனையை எட்டுவதற்கு உறுதுணையாக இருந்த துறைமுக அதிகாரிகள், கப்பல் முகமை நிறுவனமான பரைக் மரைன் சர்வீசஸ், சரக்குகளை ஏற்றி, இறக்கும் நிறுவனமான சீ பிரிட்ஜ் ஸ்டீவடர்ஸ் நிறுவன அதிகாரிகள் மற்றும் இறக்குமதியாளர்கள் சென்னை துறைமுகத் தலைவர் சுனில் பாலிவால் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top