Close
செப்டம்பர் 20, 2024 6:47 காலை

கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 15 -ல் மாநிலம் தழுவிய ஓட்டு மொத்த விடுப்பு எடுக்கும் போராட்டம்: அரசு டாக்டர்கள் சங்கம் அறிவிப்பு

சென்னை

சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாநில செயற்குழுக்கூட்டம்

கர்ப்ப கால இறப்பு சம்பவங்களில் மாவட்ட ஆட்சியர்களின் தவறான விசாரணை அணுமுறைகளைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மார்ச். 5 -ஆம் தேதி  மாநிலம் தழுவிய  ஒட்டு மொத்த விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

சென்னையில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாநில தலைவர் கே. செந்தில் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (12.2.2023)  நடைபெற்ற அச்சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை அண்ணா அரங்கத்தில் நடை பெற்ற மாநில செயற்குழுக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாநில சொதுச்சசயலாளர் கே.ரவிஷங்கர்,மற்றும் மாநில செயலாளர்கள் (DME, DMS, DPH), அனனத்து மாவட்ட சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். கூட்டத்தில்
பின்வரும் முக்கிய கோரிக்கைகள் குறித்த விவாதிக்கப் பட்டது.

அரசு மருத்துவர்களுக்கு வருடத்திற்கு ரூபாய் 200 கோடி மதிப்புள்ள அரசாணை 293 -ஐ அமல்படுத்த வேண்டும்.ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு கூடுதலாக பணி நேரம் வழங்கியதை (அரசாணை எண்: 225) திருத்தி பழையபடி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை என்ற திருத்தப்பட்ட ஆணை வெளியிட வேண்டும்.

கர்ப்ப காலத்தில் இறப்பு குறித்த மாவட்ட தணிக்கை: இதில் பெரும்பாலான மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அரசாணை எண் 389 -க்கு மாறாக தணிக்கை செய்யாமல் மருத்துவர்களை கடின வார்த்தைகளால் திட்டியும் கேலி செய்தும் வருகின்றனர்.  மேலும் நோயாளிகள் உறவினர்களை வைத்துக்கொண்டு மருத்துவர்களை தவறு இருப்பது போலவே கூறுகின்றனர்.

மூத்த சிறப்பு மருத்துவர்கள் இதில் மருத்துவ தவறுகள் இல்லை என்று கூறினாலும் அவற்றை ஏற்றுக்கொள்ளாமல் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பலர் அரசாணை விரோதப் போக்கை கடைப்பிடித்து வருகின்றனர். இதனை சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. தணிக்கைக்கும் விசாரணைக் கும் வித்தியாசம் தெரியாமல் தங்களது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கின்றனர். இதனை தடுத்து  நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு காப்பீடு மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து குறியீடுகள் அதனை அடையாவிட்டால் தண்டனை என்பதனை ரத்து செய்ய வேண்டும்.

அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளில் சராசரியாக 10 சதவீத நோயாளிகளுக்கே மருத்துவ காப்பீட்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால் மருத்துவ காப்பீட்டை மட்டுமே முன்னிறுத்தி மாநில அளவில் ஆய்வு மேற்கொள்வதும், மருத்துவர்களுக்கு  இலக்கீடு  வழங்குவதும் அந்த இலக்கை அடையாதவர்களை பணியிட மாற்றம் மற்றும் தண்டனை என்று  மிரட்டுவது தவறானதாகும்.

உலக சுகாதார நிறுவனத்தில் குடும்ப நல (குறியீடு) இலக்குகளை, டார்கெட் எனும் வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என்பது 25 வருடங்களுக்கு முன்பிருந்தே பின்பற்றப்பட்டு வருகின்றது.  ஆனால் அதற்கு மாறாக காப்பீடு இல்லாத பல முக்கிய பணிகளை பார்க்கும் மருத்துவர் கூட  இலக்கீடுகளை அடையாததால் தண்டிக்கும் நடைமுறையைக் கைவிட வேண்டும்.

சுகாதார துறை துணை இயக்குனர் பதவிகளில் ஆரம்ப சுகாதார நிலையத்தில்பணிபுரியும் மருத்துவர்களுக்கு 50% பதவிகளை ஒதுக்க வேண்டும்.

டாக்டர்கள் காப்பீட்டு நிதி (DCF) – மருத்துவர்களுக்காக மருத்துவர்களால் ஏற்படுத்தப்பட்ட காப்பீட்டு நிதியிலிருந்து ரூபாய் 50 லட்சம் மற்றும் ஒரு கோடி உறுப்பினர் குடும்பங்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டன.

சென்னை
சென்னை அண்ணா அரங்கில் நடைபெற்ற தமழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாநில செயற்குழுக்கூட்டம்

கூட்டத்தில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தமிழ்நாடு அரசு டாக்டர்களுக்கு பணிபலன் மற்றும் அலவன்ஸ் பெற்று தரக்கூடிய அரசாணை G O. No: 293 -ஐ, சில நபர்கள் தங்களின் சொந்த விருப்பு வெறுப்பு காரணமாகவும் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவும் அதனை அமல்படுத்த விடாமல் தடுத்து வருகின்றனர். தமிழக முதலமைச்சரால் வெளியிடப்பட்ட  அரசாணை 293 ஐ உடனடியாக அமல்படுத்த
வேண்டும்.

Maternal death audit -ஐ தமிழ்நாடு அரசு வழங்கிய அரசாணை GO.389 dated 04.09.2018 -ஐ பின்பற்றி நடத்தாமல் மருத்துவர்களையும் இறந்த உறவினர்கள் முன்பு ஒரு குற்றவாளி போல நடத்துவதை இச்சங்கம் வன்மையாக கண்டிப்பதுடன் இனிவரும் காலங்களில் அரசாணையை பின்பற்றி  நடக்க வேண்டும்.

மருத்துவ கல்லூரிகளிலும், மாவட்ட மருத்துவமனைகளிலும் மருத்துவர்களின் தலையாய பணி நோயாளிகளை கவனிப்பது, மருத்துவ மாணவர்களுக்கு பயிற்சி மற்றும் பாடம் எடுப்பது, பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு இடையூறாகவும், லாப நோக்கத்துடனும் இன்சூரன்ஸ் (target) இலக்கு   மருத்துவர்களுக்கு நிர்ணயித்து அதனை அடைய நிர்பந்திப்பதோடு  இலக்கை (target) அடையாத மருத்துவர்கள் மீது துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதை வன்மையாக கண்டிப்பது.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த காலங்களில் பணி நேரம் 9 முதல் 4 வரை என்று இருந்ததை மாற்றி 8am முதல் 4pm என மாற்றி அரசாணை வெளிவந்ததை கண்டித்து இச்சங்கம் மாண்புமிகு மருத்துவ துறை அமைச்சர்  சந்தித்து முறையிட்ட போது, அவர் இச்சங்கத்தின் கோரிக்கையை ஏற்று புதிய அரசாணையை வழங்குவதாக உறுதி அளித்திருந்தார். அதற்கான மாற்று அரசாணையை (9 AM to 4PM) தாமதமின்றி வெளியிட வேண்டும்.

 போராட்ட ஆயத்த தீர்மானங்கள்:

மாவட்டம் தோறும் போராட்ட ஆயத்த கூட்டங்களை  பிப்.13 முதல் பிப்ரவரி மாதம் 26 -ஆம் தேதி வரை நடத்துவது.பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைமை அல்லது மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பிப்ரவரி 27 முதல் மார்ச் 6 -ஆம் தேதிக்குள் தர்ணா போராட்டம் நடத்தவும்.

இதற்குப் பிறகும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க விட்டால் மார்ச் 15-ஆம் தேதி புதன்கிழமை அனைத்து மருத்துவமனைகளிலும் அவசரகால சிகிச்சை தவிர பிற பணிகளில் உள்ள மருத்துவர்கள் அனைவரும் ஒரு நாள் மாஸ் தற்காலிக விடுப்பு போராட்டத்தில் ஈடுபடுவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில் அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களும், பிற மாவட்ட, தாலுகா மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களும், ESI மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்களும் கலந்து கொள்வார்கள்.

இதன் பின்னரும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க விட்டால் அடுத்த கட்ட போராட்ட நடவடிக்கை குறித்து மார்ச் -19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அவசர மாநில செயற்குழு கூடி முடிவு செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட அரசு டாக்டர் சங்கச் செயலாளர்கள் டாக்டர் பெரியசாமி, டாக்டர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட சங்க நிர்வாகிகள்  கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top