Close
நவம்பர் 22, 2024 6:09 மணி

புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்யக்கோரி போராட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழில் சங்கத்தினர்

புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் தமிழக காவல்துறை மற்றும் ஆர்டிஓ அலுவலகங்களில் மாமுல் வாங்குவதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் அனைத்து தொழிலாளர் சங்கத்தினர் மற்றும் அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் உள்ளிட்டோர் 15 நிமிடம் வாகனங்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பல இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்து காணப்பட்டது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வாகன சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் தமிழக காவல்துறை மற்றும் ஆர்டிஓ அலுவலகங்களில் மாமுல் வாங்குவதை தடுக்க வேண்டும். ஆன்லைன் அபராதம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான ரூபாய் கொள்ளை அடிக்கும் கொடூரத்தை நிறுத்த வேண்டும்.

எப்சி வழங்கும் உரிமையை தனியாருக்கு வழங்க முடிவெடுத்துள்ளதை தடுக்க வேண்டும் என்பன  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிலாளர் சங்கத்தினர் அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் மற்றும் ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் புதுக்கோட்டை மாவட்டத்தில் 150 இடங்களில் இன்று பகல் 12 மணி முதல் 12.15 மணி வரையில் வாகனங்களை சாலையில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் உட்பட நகர் பகுதியில் 13 இடங்களில் நடைபெற்ற இந்த போராட்டத்தால் புதுக்கோட்டை நகரத்தின் பல்வேறு முக்கிய சாலைகளிலும் 15 நிமிடம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

இதே போல தொழிலாளர் சங்கத்தினர் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக நடத்திய இந்த போராட்டத்தால் மாவட்டத்தில் 150 க்கும் மேற்பட்ட இடங்களில் கால் மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டது.போராட்டத்தின்போது தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக தங்களது கண்டன முழக்கங்களை எழுப்பி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top