Close
நவம்பர் 22, 2024 3:51 மணி

காலியாக உள்ள 1350-க்கும் மேற்பட்ட மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை RAO (நீதிமன்ற வளாகம்) கட்டிடத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம்

மக்கள் நலன் கருதி 1350-க்கும் மேற்பட்ட காலியாகவுள்ள மருந்தாளுநர் பணியிடங்களை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வழியாக உடன் நிரப்ப வேண்டும்மென தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்க மாநில செயற்குழுவில் வலியுறுத்தப்பட்டது.

புதுக்கோட்டையில் 12.3.2023 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்துக்கு மாநில தலைவர் வே. விஜயகுமாரன் தலைமை வகித்தார். இதில் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் வள்ளியப்பன் வரவேற்புரை ஆற்றினார் பொதுச்செயலாளர் பூ. சண்முகம் வேலை அறிக்கையும் மாநில பொருளாளர் ஹேமலதா வரவு-செலவு அறிக்கையும் வாசித்தனர்.

இந்த கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டன:

அரசு முதன்மைச் செயலாளர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ஏற்றுக் கொண்டவாறு, மக்கள் நலன் கருதி 1350-க்கும் மேற்பட்ட காலியாகவுள்ள மருந்தாளுநர் பணியிடங் களை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வழியாக உடன் நிரப்ப வேண்டும்.

39 நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநர்களை பணி வரன் முறை செய்ய வேண்டும். 46 துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் மருந்து கிடங்குகளில் தலைமை மருந்தாளுர் பணியிடம் உருவாக்க வேண்டும். 385 வட்டார மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தக கண்காணிப்பாளர் பணியிடம் உருவாக்க வேண்டும்.

நோயாளிகளின் எண்ணிக்கைகேற்ப கூடுதலாக மருந்தாளு நர் பணியிடங்களை உருவாக்க வேண்டும். 110 தாலுக்கா மற்றும் தாலுக்கா அல்லாத மருத்துவமனைகளில் தலைமை மருந்தாளுநர் பணியிடம் உருவாக்க வேண்டும்.

மருந்தாளுநர்கள், தலைமை மருந்தாளுநர்கள், மருந்து கிடங்கு அலுவலர்களுக்கு கொரோனா ஊக்கத்தொகை வழங்க வேண்டும். மருந்து மற்றும் அறுவை சிசிக்சை பொருட்கள் விலை உயர்வுக்கேற்ப மற்றும் மக்கள் நலத்திட்டங்களுக் கேற்ப கூடுதலாக 60% நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். புதிய பென்சன் திட்டத்தினை ரத்து செய்து, பழைய பயனளிப்பு ஓய்வூதிய திட்டத்தினை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு விவாதத்தில் பங்கேற்றனர்.

இதில், மாநில நிர்வாகிகள் பைரவநாதன் சகாதேவன், ராஜராஜன், வல்லவன், ராமநாத கணேசன், ஆனந்தவள்ளி,
கிருஷ்ணமூர்த்தி, பாஸ்கரன்,பெருமாள், இளங்கோ, சுகுமார் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜபருல்லா, மாவட்ட செயலாளர் ரங்கசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில பொருளாளர் ஹேமலதா நன்றியுரை வழங்கினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top