Close
நவம்பர் 22, 2024 11:16 காலை

ஓராண்டில் ரூ.1,943 கோடி வருவாய் ஈட்டி சென்னை, எண்ணூர் காமராஜர் துறைமுகங்கள் சாதனை

சென்னை

சென்னை துறைமுகத் தலைவர் சுனில் பாலிவால் தகவல்

சென்னை, எண்ணூர் காமராஜர் துறைமுகங்கள்  ஓராண்டில் ரூ.1,943 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளதாக துறைமுகத் தலைவர் சுனில் பாலிவால் தகவல் தெரிவித்தார்.

கடந்த 2022-23 -ம் நிதி ஆண்டில் சென்னைத் துறைமுகம் ரூ. 943 கோடியும், இதன் துணை நிறுவனமான எண்ணூர் காமராஜர் துறைமுகம் ரூ. ஆயிரம் கோடியும் மொத்த வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது என சென்னை, எண்ணூர் காமராஜர் துறைமுகங்களின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் சுனில் பாலிவால் திங்கள்கிழமை சென்னையில் தெரிவித்தார்.

சென்னை, எண்ணூர் காமராஜர் துறைமுகங்களின் 2022-23 ஆண்டிற்கான ஒட்டுமொத்த செயல்பாடுகள் குறித்து துறை முகங்களின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் சுனில் பாலிவால் திங்கள் கிழமை செய்தியாளர்களிடம் விளக்கிக் கூறியது,

சென்னை துறைமுகம் கடந்த நிதியாண்டில் சுமார் 49 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. இதில் கச்சா எண்ணெய், சரக்குப் பெட்டகங்க சரக்குகள், கார்கள், கணிமங்கள், தாதுக்கள் உள்ளிட்டவைகள் முக்கியமானவை ஆகும்.  சென்னை, எண்ணூர் துறைமுகங் கள் இணைந்து சுமார் 3.8 லட்சம் வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளன.

கடந்த ஓராண்டில் மட்டும் 1,616  சரக்கு கப்பல்கள் வந்து சென்றுள்ளன.  37 சுற்றுலா மற்றும் பயணிகள் கப்பல்கள் வருகை தந்துள்ளன.  சென்னை துறைமுகத்தின் ஒட்டுமொத்த  வருவாயாக ரூபாய் ரூ.943 கோடியும்,  நிகர லாபமாக ரூ.150 கோடியும் ஈட்டப்பட்டுள்ளது.  இது கடந்த 13 ஆண்டுகளில் சென்னை துறைமுகம் ஈட்டிய உச்சகட்ட நிகர லாபம் இதுவே ஆகும்.

கப்பல்களுக்கு எரிபொருட்களை நிரப்பும் கப்பல் தளம் ரூ.44 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது. பல்வேறு சரக்குகளை இருப்பு வைப்பதற்காக 11 ஹெக்டேர் திறந்த வெளி பரப்ப ளவில் ரூ. 54 கோடியில் கான்கிரீட் கற்களால் அமைக்கப்பட்டு வருகிறது.

கண்டெய்னர் லாரிகள் போக்குவரத்து நெரிசலை மென் மேலும் குறைக்கும் வகையில் துறைமுகத்தின் உள்ளே சுமார் 350 கண்டெய்னர் லாரிகள் நிறுத்தி வைக்கும் வகையில் ரூ.53 கோடி செலவில் வாகனங்கள் நிறுத்த மையம் அமைக்கப் பட்டு வருகிறது.

ஸ்ரீபெரும்புதூர் அருகே மப்பேடுவில் ரூ.1,423 கோடி சுமார் 184 ஏக்கர் பரப்பளவில் பல்நோக்கு சரக்கு பெட்டக பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது இதற்கான பணிகள் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.

தனியார் துறைமுகங்களோடு வணிகரீதியில் போட்டியிடு வதற்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை சென்னை துறைமுக நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்,  கப்பல் மாலுமிகள் பயன்பெறும் வகையில் சுங்க கட்டணம் இல்லாத கூடுதல் வணிக மையம் அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும்.

 சென்னை துறைமுகத்தில் காலியாக உள்ள கட்டிடங்களில் துறைமுகம் தொடர்புடைய நிறுவனங்களுக்கு வாடகைக்கு அளிப்பதில் உள்ள குறைபாடுகள் நீக்கப்பட்டு இதற்கான புதிய விதிமுறைகளை வகுக்க ஆய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.

ரூ.1000 கோடி வருவாய் ஈட்டிய காமராஜர் துறைமுகம்:

நாட்டிலேயே கம்பெனி சட்டங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட முதல் பெருந்துறைமுகம் எண்ணூர், காமராஜர் துறைமுகம் ஆகும்.  மிக வேகமாக வளர்ச்சிய டைந்து வரும் துறைமுகங்களில் ஒன்றாக காமராஜர் துறைமுகம் விளங்கி வருகிறது.

கடந்த நிதியாண்டில் சுமார் 44 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டுள்ளது.  இதில் பெரும்பகுதி எரிசக்திக்கு தேவையான பெட்ரோலியம், எல்.என்.ஜி, எல்.பி.ஜி., நிலக்கரி உள்ளிட்ட சரக்குகளை கையாண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

காமராஜர் துறைமுகம் கடந்த நிதியாண்டில் ஒட்டுமொத்த மாக ரூ.ஆயிரம் கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள் ளது. இதில் நிகர லாபமாக ரூ.670 கோடி ஈட்டியுள்ளது. கடந்த நிதி ஆண்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சரக்கு கப்பல்கள் காமராஜர் துறைமுகத்திற்கு வந்து சென்றுள்ளன.  சரக்குகள் கையாளும் திறனை அதிகரிக்கும் வகையில் ரூ. 1,082 கோடியில் கட்டுமான பணிகளை துறைமுகம் மேற்கொண்டு வருகிறது.

பெரும் நிறுவன சமூக பொறுப்பாண்மை திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் சுமார் ரூ. 10 கோடி நிதியை பொதுமக்கள் பயன்பெறும் பல்வேறு திட்டங்களுக்கு காமராஜர் துறைமுகம் வழங்கி உள்ளது.

காமராஜர் துறைமுகத்திற்கு பெரிய கப்பல்கள் வந்து செல்லும் வகையில் ரூ.549 கோடி மதிப்பீட்டில் சுமார் 18 மீட்டர் ஆழம் கொண்டதாக துறைமுகத்தில் நீர்ப்பகுதி தூர்வாரப்பட உள்ளது.

இந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் தனியார் துறைமுகங்களின் போட்டிகளை சமாளிக்கும் வகையில் சென்னை, எண்ணூர் துறைமுகங்கள் இணைந்து செயலாற்றி வருகின்றன.  இதன் மூலம் நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு இத்துறைமுகங்கள் பெரும் பங்காற்றி வருகின்றன என்றார் சுனில் பாலிவால்.

பேட்டியின் போது சென்னை துறைமுகத் துணை தலைவர் எஸ். பாலாஜி அருண்குமார், காமராஜர் துறைமுக பொது மேலாளர் சஞ்சய்குமார், பத்திரிகை தொடர்பு அலுவலக கூடுதல் இயக்குனர் எம்.அண்ணாதுரை உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top