Close
நவம்பர் 21, 2024 11:48 மணி

மதுரையில் தமிழ்நாட்டின் நீளமான புதிய பறக்கும் மேம்பாலம் : பிரதமர் திறப்பு

மதுரை

மதுரையில் பாண்டியன் ஓட்டல் முதல் ஊமச்சிகுளம்- செட்டிகுளம் வரை 7.3 கிமீ பறக்கும் பாலம்

தமிழ்நாட்டிலேயே மிக நீண்டமான பாலமாக கட்டப்பட்டுள்ள மதுரை பாண்டியன் ஓட்டல்- ஊமச்சிகுளம்- செட்டிகுளம் வரையிலான பறக்கும் மேம்பாலம் மதுரையின் புதிய அடையாளமாக  பார்க்கப்படுகிறது.  7.3 கிலோ மீட்டர் தொலைவுக்கு கட்டி முடிக்கப்பட்டுள்ள  இந்த மேம்பாலத்தை தமிழ்நாட்டுக்கு  வரும் பிரதமர் மோடி (ஏப்.8) திறந்து வைக்க உள்ளார்.

தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் மதுரை தல்லாகுளம் ஐ.ஓ.சி அலுவலகம் அருகே இருந்து நத்தம் வரை 35 கி.மீ.க்கு ரூ.1,028 கோடியில் நான்குவழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.  இந்த சாலையில் மதுரை  பாண்டியன் ஓட்டல் முதல் ஊமச்சிகுளம் -தல்லாகுளம் செட்டிக்குளம் 7.3 கிமீ தொலைவுக்கு 550  கோடி ரூபாயில் இந்த பறக்கும் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. , கடந்த 15.6.2018 ஆண்டு தொடங்கிய பணிகள் 8.4.2023 -ல் நிறைவடைந்தது.

பாலத்திற்கு அடியில் 150 அடிக்கு ஒன்று என பலமான அஸ்தி வாரத்துடன் 268 தூண்கள் கட்டப்பட்டுள்ளன. தூண்கள் இடையே பாலத்தை இணைக்கும் வகையில் கிடைமட்ட வாக்கில் ‘கான்கிரீட் கர்டர்கள்’ பொருத்தப்பட்டுள்ளன.

மதுரையில் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும் சென்னை, திருச்சிக்கு பயணத் தொலைவை குறைக்கவும் இந்த பறக்கும் மேம்பாலமும், நான்கு வழிச்சாலையும் அமைக்கப்படுகிறது.

இந்த பறக்கும் பாலம் வழியாக திருச்சி செல்வோருக்கு 24 கிலோ மீட்டர் பயண தூரம் குறையும் எனவும் சென்னை செல்வோருக்கு 1 மணி நேரம் பயண நேரம் குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், சென்னையில் இருந்து பிரதமர் மோடி காணொலி வாயிலாக இந்த  மேம்பாலத்தை திறந்து வைக்கிறார் . இதனை முன்னிட்டு பாலத்தில் சோதனை ஓட்டம் தொடங்கியுள்ளது. மக்கள் ஆர்வமாக பாலத்தை கடந்து செல்கின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top